TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 13 லட்சம் பேர் பதிவு! இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 13 லட்சம் பேர் பதிவு! இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 13 லட்சம் பேர் பதிவு! இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 13 லட்சம் பேர் பதிவு! இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் தான் உள்ளன. அதனால், தேர்வுக்கு தயாராவோர் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணைய தலைவர் தகவல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 29ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28ம் தேதி ஆகும்.

தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வரின் முடிவு என்ன!

இந்த வகையில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் ஜனவரி முதல் குரூப் 4 தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனால் 10ம் வகுப்பு, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

ExamsDaily Mobile App Download

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியது குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1,32,688 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார் போல் நடவடிக்கைகளை TNPSC துரிதப்படுத்தி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை ஒழுங்காக பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!