ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள‌ நிலையில், நாக பஞ்சமி, வரமஹாலக்ஷ்மி விரதம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளும் வர உள்ளன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இன்னும் சில நாட்களில் அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே வங்கிகளில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடுவது நல்லது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் குறித்த தகவல் தற்போது வெளி வந்துள்ளது. வரும் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதில் சுதந்திர தினம் 2022, ரக்ஷா பந்தன் 2022, ஜன்மாஷ்டமி 2022 போன்ற பண்டிகைகளும் அடங்கும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் திட்டம்? கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற கருவிகள் சட்டம், நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுவது ஆகியவை அடங்கும். அதாவது, தேசிய விடுமுறைகள் தவிர, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட சில மாநிலத்து என்று குறிப்பிட்ட விடுமுறைகள் உள்ளன. மேலும் வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஆகஸ்ட் 2022ல் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 1 துருபகா ஷீ-ஜி திருவிழா (காங்டாக்)
ஆகஸ்ட் 8 – முஹர்ரம் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
ஆகஸ்ட் 9 – சண்டிகர், கவுகாத்தி, இம்பால், டேராடூன், சிம்லா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், ஜம்மு, பனாஜி, ஷில்லாங் தவிர நாடு முழுவதும் விடுமுறை.
ஆகஸ்ட் 11 – ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 12 – ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 13 – தேசபக்தர்கள் தினம் (இம்பால்)
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் விடுமுறை
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு (மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை)
ஆகஸ்ட் 18 – ஜன்மாஷ்டமி (புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ)
ஆகஸ்ட் 19 – ஜென்மாஷ்டமி
ஆகஸ்ட் 20 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (ஐதராபாத் மட்டும்)
ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ் ,சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 31 – விநாயகர் சதுர்த்தி விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here