நடப்பு நிகழ்வுகள் – 12 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 12 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 12 செப்டம்பர் 2023

நடப்பு நிகழ்வுகள் – 12 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி தொடக்கம்.

 • செப்டம்பர் 9 2023 அன்று தேசிய தலைநகரமான புதுதில்லியில் நடைபெற்றுள்ள G20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியானது, நிலைத்தன்மை மற்றும் தூய்மையான மற்றும் நம்பகரமான ஆற்றலை நோக்கிய நமது தேடலில் ஒரு முக்கியமான பகுதியாக விளங்குவதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விரைவில் இந்த கூட்டணியானது தகுந்த சூழலுக்கு ஏற்ப உலகின் நிலைத்தன்மைக்கான விழிமுறைகளை உருவாக்கும் என மாநாட்டில் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரி எரிபொருளை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக பல்வேறு நாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் கூட்டணியை உருவாக்குவதற்கான இந்தியா தலைமையிலான முக்கிய முன்முயற்சி இந்த கூட்டணி என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

இரண்டு நிதியாண்டு மேம்பாட்டுகளுக்காக PFC உடன் REC ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 • 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான மத்திய பொது நிறுவனங்களின் மேம்பாட்டுDPE செயல்திறன் மதிப்பீட்டு முன்னெடுப்பு முறையின்படி PFC நிறுவனமானது REC அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) கையெழுத்திட்டுள்ளது.
 • REC அமைப்பின் தலைவர்(CMD) விவேக் குமார் தேவாங்கன் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இதன் படி 2023-24 நிதியாண்டில் கிட்டத்தட்ட ரூ. 469.35 பில்லியன் மற்றும் 2024-25 நிதியாண்டில் சுமார் ரூ. 563.22 பில்லியன் மதிப்பிலான செயல்பாடுகள் மூலம் நிறுவன வருவாயை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு REC இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகும். REC மகாரத்னா பிரிவை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். PFC மற்றும் REC இரண்டும் இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

ONDC அமைப்பானது கேரள போக்குவரத்து துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 • டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் அமைப்பானது(ONDC), நாட்டின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT), ஒரு முக்கிய முன்னெடுப்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் கேரள அரசின் போக்குவரத்துத் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளது.
 • கேரள அரசின் சார்பில் போக்குரவரத்து அமைச்சர் மற்றும் ONDC அமைப்பின் சார்பில் ஜோஷி (CBO) ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது 2019 ஆம் ஆண்டில் KOMN உடன் தொடங்கப்பட்டதன் விரிவாக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மாநிலத்தின் ஒருங்கிணைப்பு, எந்த தடையும் இல்லாமல் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய இயக்க சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இணயத்தள ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் மற்றும் பாரத் 6ஜி அலையன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • இந்தியா மற்றும் அதன் சார்ந்த பகுதிகள் மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள 6ஜி கம்பிவடமற்ற தொழில்நுட்பங்களில் அனைத்து நிறுவன ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் மற்றும் அதனை மேம்படுத்துவதற்காகவும் நெக்ஸ்ட் ஜி அமைப்பு மற்றும் பாரத் 6ஜி  அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • ATIS இன் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் மில்லர் மற்றும் பாரத் 6ஜி அலையன்ஸ் தலைவர் என்.ஜி. சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் பொதுவான 6G பார்வையை ஆதரிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகளை சீரமைப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகரமான தொலைத்தொடர்புகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

உலகின் மிக உயரமான போர் விமான தளமானது லடாக்கில் அமைக்க திட்டம்.

 • இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள நியோமா பகுதியில் உலகின் மிக உயரமான போர் விமானநிலையம் அல்லது தளத்தை அமைக்க உள்ளதாக எல்லை சாலைகள் அமைப்பு(BRO) செப்டம்பர் 10 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 • இந்த முக்கிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் செப்டம்பர் 12 அன்று அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் ₹218 கோடி செலவில் கட்டப்படும் இந்த விமான நிலயமானது லடாக்கில் விமான உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட உள்ளது என BRO அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசுகளுக்கிடையில் தொழில்களின் ஆராய்ச்சி பற்றி ஆராய பல்வேறு மேம்பாட்டு புரிந்துணர்வு ஓப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • விவசாயம், கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் மனித வளம் ஆகிய துறைகளின் மேம்பாடு குறித்து ஆராய இந்தியா மற்றும் சவுதி அரேபியா நிறுவனங்களுக்கு இடையே இருபதுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இதில் ஹெச்பி நிறுவனம், சீரம் இந்தியா நிறுவனம், விஎஃப்எஸ் குளோபல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட இரு நாடுகளின் தனியார் நிறுவனங்களிடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

ஒலிம்பிக் சாம்பியனான முடாஸ் கத்தார் நாட்டின் சுற்றுலாத்துறை விளம்பர தூதராக தேர்வு.

 • உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான முடாஸ் பர்ஷிம் என்பவரை தனது நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் புதிய விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு வெளியிட்டுள்ள தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • ஐந்து உலக தொடர் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற ஒரே உயரம் தாண்டுதல் தடகள வீரர் என்ற பெருமையை இவர் சமீபத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் செப்டம்பர் 2023 – செப்டம்பர் 2024 வரை கத்தார்  நாட்டின் சுற்றுலாவின் பிரச்சாரங்களின் புதிய முகமாக விளங்குவார் என  அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவும் வியட்நாமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

 • இரு நாடுகள் மற்றும் குறிப்பாக அமெரிக்கத் தொழில்துறைக்கு ஆதரவாக, ஹனோ சார்ந்த பிராந்திய பகுதிகளில் உள்ள குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை விரிவுபடுத்த, மற்றும் அதனை மேம்படுத்துவதற்காக, குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகள் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் வியட்நாமும் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளன.
 • செப்டம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை அறிக்கையில், வியட்நாமில் வலிமையான குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய குற்றவியல் சங்கத்தின் 23வது ஆண்டு மாநாட்டில் “டச் மீ நாட்” ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 • இந்தியாவில் உள்ள பொது இடங்களில் மோசமான தொடுதல் பற்றிய பரவலான பிரச்சினையை ஆராய்ந்து அதற்கான ஒரு தீர்வுகளை உள்ளடக்கிய ஜிண்டால் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியோரல் சயின்ஸ் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படமானது, ஐரோப்பிய குற்றவியல் சங்கத்தின் 23வது ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
 • மூன்று நாள் திட்டமிடப்பட்ட இந்த மாநாட்டில் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்டீபன் பார்மெண்டியரால் இந்த ஆவணப்படமானது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 30-நிமிடங்கள் கொண்ட இந்த ஆவண படமானது, இந்தியா முழுவதும் உள்ள பொது இடங்களில் பாலியல் ரீதியாக பொருத்தமற்ற தொடுதலின் பரவலான பிரச்சனையை ஆராய்வதாக அமைகிறது.

மாநில செய்திகள்

அசாமில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.

 • அசாம் மாநிலத்தின் முக்கிய நகரமான கவுகாத்தியில் உள்ள மாநில புதிய சட்டப்பேரவையின் கட்டிட வளாகத்தில் மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியின் சிலையை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செப்டம்பர் 11 அன்று திறந்து வைத்துள்ளார்.
 • அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவையின் ஐந்து நாள் இலையுதிர்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 11 அன்று தொடங்கியுள்ளது. மேலும் கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அசாம் சட்டசபை கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

REVLON-க்கான உலகளாவிய விளம்பர தூதராக நைலியா நியமனம்.

 • உலகளாவிய புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் சேவை வழங்குநரான ரெவ்லான் நிறுவனமானது, அதன் உலகளாவிய விளம்பர தூதராக நைலியா டெவோரா என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் 2024 வரை Revlon நிறுவன விளம்பர முகப்பாக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

லித்தியம் யுனிவர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக ஜிங்யுவான் நியமனம்.

 • லித்தியம் ஆய்வில் கவனம் செலுத்தும் மற்றும் ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் லித்தியம் யுனிவர்ஸ் நிறுவனத்தின்(LU7) தனி பொறுப்பு இயக்குனராக தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் ஜிங்யுவான் லியுவை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக கேலக்ஸி ரிசோர்சஸில் நிறுவனத்தின் மேலாண்மை மற்றும் தொழிநுட்ப பிரிவு பொது மேலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப அனுபவம் கொண்ட இவர் தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் நிறுவன மேன்மைக்காக பாடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

2022 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளின் தேர்வு பட்டியல் வெளியீடு.

 • கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் நாட்டின் சிறந்த வருடாந்திர அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் பட்டியலானது செப்டம்பர் 11 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
 • இந்த ஆண்டு ஏழு பிரிவுகளில் விருதுகளை 12 விஞ்ஞானிகள் பெறுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளானது உயிரியல், இயற்பியல், பொறியியல், கணிதம், வேதியியல், மருத்துவம், மற்றும் பூமி அறிவியல் ஆகிய ஏழு அறிவியல் துறைகளில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விருதுகளானது CSIR-ன் முதல் இயக்குநரான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான உலக வில்வித்தை கோப்பை போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

 • 2023 ஆம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய வில்வித்தை வீரரான பிரதமேஷ் ஜாவ்கர் கடும் சூழலுக்கு பிறகு தனது வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
 • உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஜவ்கர் தங்கப் பதக்கப் போட்டியில் 10-வது தரவரிசை இடத்தில் உள்ள டென்மார்க் நாட்டின் மத்தியாஸ் புல்லர்டனை எதிர்த்து போட்டியிட்டு இந்த பதக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

தேசிய வன தியாகிகள் தினம் 2023

 • நாட்டில் உள்ள அனைத்து காடுகளையும் அதன் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கவும் அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் நாளானது தேசிய வன தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 • மேலும் இது 1730 ஆம் ஆண்டு கெஜர்லி படுகொலையின் ஆண்டு நினைவு தினமாக பொதுவாக பார்க்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படுகொலையில், கிட்டத்தட்ட 363 பிஷ்னோய் கிராம மக்கள் மரங்களை பாதுகாக்கும் போது கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். Honoring Sacrifice என்பதை பொது கருத்தாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறதாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!