நடப்பு நிகழ்வுகள் – 12 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 12 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 12 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 12 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

ERMED கூட்டமைப்பின் நான்காவது தேசிய மாநாடு தொடக்கம்.

  • டிஜிட்டல் சுகாதார மாற்றத்திற்கான நூலகங்களை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ERMED கூட்டமைப்பின் நான்காவது தேசிய மாநாடானது குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களால், ஆகஸ்ட் 11 அன்று புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • கோவிட் காலத்தில் தொலைத்தொடர்பு மற்றும் சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தின் அவசியத்தை கற்றுக்கொண்டதையடுத்து மீண்டும் அந்த நிலைக்கு திரும்பாமல் இருப்பதற்கான பல வழிமுறைகளை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைப்பெற உள்ளது.

4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்திய பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

  • பிரதமர் மோடி ஆகஸ்ட் 12 அன்று மத்திய பிரதேசத்தில் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் துறைகளுக்கான மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • இதில் குறிப்பாக ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சாலை திட்டங்களும் மோரிகோரி – விதிஷா மற்றும் ஹினோதியாவை இணைக்கும் நான்கு வழிச் சாலைத் திட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களானது இங்குள்ள பல்வேறு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிழி கழிவு மேலாண்மைக்கான திட்டத்தை மேம்படுத்த பெப்சிகோ இந்தியா நிறுவனமானது தி சோஷியல் லேப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • உத்திர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் நுகர்வோருக்கு நெகிழி கழிவுகளை, நிலையான மற்றும் மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தும் வகையில் நிர்வகிக்க டிடி டிரெயில்ஸ் என்ற ஒரு முன்னெடுப்பு முயற்சியானது ஆகஸ்ட் 2023 இல் தொடங்கப்பட்டுள்ளது.
  • வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறை இணை அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே அவர்களால் இந்த முக்கிய முன்னெடுப்பு முயற்சியானது தொடங்கப்பட்டுள்ளதாகும். இதன் முதக்கட்டமாக  நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 500 கடைகளுக்கு மேல் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NITI ஆயோக் அமைப்புடன் இஸ்ரோ இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான “தேசிய விண்வெளி கண்டுபிடிப்பு சவால் 2023” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

  • அடல் மேம்பாட்டு திட்டம், NITI ஆயோக் அமைப்புடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் “தேசிய விண்வெளி கண்டுபிடிப்பு சவால் (NSIC) 2023” ஐ ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை இந்த முன்னெடுப்புக்கான திறந்தவெளி மேடையானது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது நவீன காலத்திற்கான விண்வெளித் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க தங்களைப் புதுமைப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவு பயணத்திற்கான “லூனா-25” என்ற விண்கலமானது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

  • 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் நிலவு பயணத்திற்கான “லூனா 25” திட்டத்தை ஆகஸ்ட் 11 அன்று அந்நாடு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் தென்தூர கிழக்கில் உள்ள Vostochny என்ற ஏவுதளத்தில் இருந்து இந்த Luna-25 விண்கலமானது Soyuz-2 Fregat ராக்கெட்டில் காலை 8:10 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை மெருகூட்டுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரஷ்யா விண்வெளி நிறுவனமான ROSCOSMOS அறிவித்துள்ளது. இந்தியாவானது சமீபத்தில் தனது மூன்றாவது நிலவு பயணமான சந்திராயன் 3 ஆனது செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ரஷ்யாவின் முடிவானது உலக விஞ்ஞானிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நைஜர் நாட்டின் பாதுகாப்பிற்காக ECOWAS-பிராந்தியப் படையை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக கூட்டமைப்பானது(ECOWAS), ராணுவ குழுவின் சதிப்புரட்சியால் பாதிக்கப்பட்ட நைஜர் நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக, ECOWAS அமைப்பின் “பிராந்திய காத்திருப்புப் படையை” அந்த நாட்டின் எல்லையில் செயல்படுத்தவும், நிலைநிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த வீரியமான மற்றும் சர்ச்சைக்குரிய முடிவானது நைஜரின் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு ECOWAS அமைப்பானது வழங்கிய ஒரு வார கால அவகாசம் காலாவதியான பிறகு அங்கு ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • அருணாச்சலப் பிரதேச மாநில அரசாங்கமானது, புதுடெல்லியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் சுகாதார நிறுவனத்துடன் அம்மாநிலத்தின் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 11 அன்று மேற்கொண்டுள்ளது. 
  • இந்த முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமானது அருணாச்சலப் பிரதேச மாநில அரசாங்கம் மற்றும் கங்கா ராம் மருத்துவமனை மற்றும் ரெலிகேர் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே மேற்கொள்ளபட்டுள்ளதாகும். 
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது அம்மாநில மக்களுக்கு அணுகக்கூடிய, மலிவு மற்றும் சமமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஜல் ஜீவன் சர்வேக்ஷன் 2023’ தரவரிசையில் ஸ்ரீநகர் ஆனது முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு மாவட்டமான ஸ்ரீநகர், ‘2023 ஆம் ஆண்டிற்கான ஜல் ஜீவன் சர்வேக்ஷன் ‘ தரவரிசையில் ‘முன் ஓட்டப்பந்தய வீரர்கள்’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • அந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா, இந்த மாவட்டமானது இதன் பிரிவில் முதல் தரவரிசையைப் பெற்றதற்கும் ஸ்ரீநகர் மாவட்டத்தை சிறப்பாக நிர்வாகத்திற்காக DC Sgr முகமட் அய்ஜாஸ் ஆசாத் அவர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அமைப்பு சின்னத்தை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

  • தமிழகத்தின் சென்னையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான (GMI) “அமைப்பின் சின்னத்தை(LOGO)” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 10 அன்று வெளியிட்டுள்ளார்.
  • இந்த மாநாடானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் நாட்களில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “தா” என்ற தமிழ் எழுத்தை மையமாக கொண்டு இந்த சின்னமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் தொழில்முனைவு முதலீட்டாளர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் வண்ணம் இந்த மாநாடானது நடைபெற உள்ளது.

நாகாலாந்தின் முதல் நாகா பாரம்பரிய உணவு ஆய்வகமானது கோஹிமாவில் தொடங்கப்பட்டுள்ளது.

  • நாகாலாந்தின் முதல் நாகா பாரம்பரிய உணவு ஆய்வகமானது அம்மாநில தலைநகரமான கோஹிமா மாவட்டத்தின் கீழ் உள்ள ஜாப்ஃபு கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 2023 இல்  தொடங்கப்பட்டுள்ளதாகும்.
  • இந்த ஆய்வகமானது தோட்டக்கலைத் துறை மற்றும் மகளிர் வள மேம்பாடுக்கான மாநில அமைச்சர் “சல்ஹூதுவோனுவோ க்ரூஸ்” ஆகஸ்ட் 10 அன்று திறந்து வைத்துள்ளார். நாட்டின் பாரம்பரிய உணவுகளை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இந்த ஆய்வகமானது தொடங்கப்பட்டுள்ளதாகும்.

20 அடி உயரத்தில் முற்றிலும் தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையானது கோவையில் நிறுவப்பட்டுள்ளது.

  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கோயம்பத்தூரில் உள்ள குறிச்சி குளத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற தமிழ் தத்துவஞானியான “திருவள்ளுவரின் 20 அடி உயர சிலையை” கோவை மாநகராட்சி ஆகஸ்ட் 2023 இல் நிறுவியுள்ளது.
  • முழுவதும் எஃகு கலவையால் வடிவமைக்கப்பட்ட இந்த சிலையானது அவர் எழுதிய 1,330 குறள்களைக் குறிக்கும் வகையில், அங்கு 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட்டுள்ளதாகும். இதில் திருவள்ளுவரின் முதல் திருக்குறளான – ‘அகர முதல் எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்பது அச்சிலை வடிவமைக்கப்பட்ட மேடையில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹரியானாவின் நுஹ் மாவட்டமானது நிதி ஆயோக்கின் டெல்டா தரவரிசையில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

  • ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தில் நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கையின் படி டெல்டா தரவரிசையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டமானது இரண்டாவது இடத்திற்கு ஆகஸ்ட் 2023 இல் முன்னேறியுள்ளது.
  • ஆர்வமுள்ள மாவட்டங்களின் மற்ற அளவுருக்களிலும் மாவட்டத்தின் தரவரிசையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் நூஹ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயம் மற்றும் நீர் ஆதாரங்களின் பிரிவில் இந்த நூஹ் மாவட்டமானது முதலிடத்தைப் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பெண் 26.2 புள்ளிகளிலிருந்து 30.7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

நியமனங்கள்

குஷ்மேன் & வேக்ஃபீல்டு நிறுவனமானது வீர பாபுவை நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது.

  • இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆனது, அதன் இந்திய பிரதிநிதித்துவத்தின் நிர்வாக இயக்குநராக வீரா பாபுவை ஆகஸ்ட் 2023 இல் நியமித்துள்ளது.
  • இந்த நியமனத்தின் மூலம் இவர் நகரங்கள் முழுவதும் இந்நிறுவனத்தின் முன்னணி நிலையை வலுப்படுத்த மற்றும் மேம்படுத்துவதற்காக பல்வேறு மூலோபாய வணிக வளர்ச்சி முன்னெடுப்புகளை மேற்கொள்வர் என அந்நிறுவனம் தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரானது ஆகஸ்ட் 21 அன்று டென்மார்க்கில் தொடங்குகிறது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரானது ஆகஸ்ட் 21 அன்று டென்மார்க் நாட்டின் தலைநகரமான  கோபன்ஹேகனில் தொடங்க உள்ளது.
  • கடந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரானது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

புகழ்பெற்ற இயற்பியலாளரான பிகாஷ் சின்ஹா காலமானார்.

  • சாஹா அணு இயற்பியல் நிறுவனம் மற்றும் ஆற்றல் சைக்ளோட்ரான் மையத்தின் முன்னாள் இயக்குனரான புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் விஞ்ஞானியான பிகாஷ் சின்ஹா(வயது 78) ஆகஸ்ட் 11 அன்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.
  • இவர் 2001 இல் மதிப்பிற்குரிய பத்மஸ்ரீ விருதும் 2010 இல் பத்ம பூஷன் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவரை மேற்கு வங்க முதல்வர் “புகழ்பெற்ற மகன்” என்று வர்ணித்து தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச இளைஞர் தினம் 2023

  • இளைஞர்களின் குணங்கள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அவர்களின் திறனை மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதற்காகவும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் அகற்றுவதற்கான முயற்சிகளை கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளானது சர்வதேச இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • “Green Skills for Youth: Towards a Sustainable World” என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். மேலும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு தேவையான திறன்களை மேம்படுத்துவதை முதன்மையான நோக்கமாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக யானைகள் தினம் 2023

  • உலகெங்கிலும் உள்ள யானைகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகளவில் தனிநபர் மற்றும் பல்வேறு குழுக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளானது உலக யானைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக யானை 2010 இல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசியாவிலேயே சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!