பாரத ஸ்டேட் வங்கியில் 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.29ம் தேதி கடைசி நாள்!
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 1000-க்கும் மேற்பட்ட வட்டார அளவிலான வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற டிச.29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனால் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அத்துடன் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வட்டார அளவிலான அதிகாரிக்கு காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!
இதில் 1226 காலிப்பணியிடங்கள் உள்ளது. இத்தேர்வுக்கு கலந்து கொள்ள விரும்புவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத சம்பளமாக ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகுதியான நபர்கள் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு வழங்கும் 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை – ‘முன் மாதிரி கிராம’ விருது!
இந்த எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் வருகிற ஜனவரி மாதம் 12 ஆம் தேதிக்கு பின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பற்றி அறிய https://bank.sbi/careers என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.