தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!

0
தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான மண்பானையை தமிழக அரசு கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மண்பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் மண்பானை:

தமிழகத்தை பொறுத்தவரை வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்படுவது தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை ஆகும். இந்த பொங்கல் பண்டிகை அன்று அனைவரும் பச்சரிசி வைத்து மண்பானையில் பொங்கல் செய்வது தமிழர் பாரம்பரியம் ஆகும். ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுகின்றனர். மண்பானை பயன்படுத்தி பொங்கல் பண்டிகை கொண்டாடும் பாரம்பரிய வழக்கம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இன்னும் இருந்து வருகிறது.

தமிழக அரசு வழங்கும் 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை – ‘முன் மாதிரி கிராம’ விருது!

இத்தகைய பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மண்பானையையும் தமிழக அரசு மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்குமாறு தொழிலாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவில்லை.

ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

அதனால் மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தங்களது தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையிலாவது மண்பானைகள் அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் மண்பானை தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் விழுப்புரம் மாவட்டம் சாலை ஓரத்தில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பானை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here