தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ – ரூ.1000 ஊக்கத்தொகை & ரூ. 25 ஆயிரம் பரிசு! முழு விவரம் இதோ!

0
தமிழக அரசின் 'இல்லம் தேடி கல்வி' - ரூ.1000 ஊக்கத்தொகை & ரூ. 25 ஆயிரம் பரிசு! முழு விவரம் இதோ!
தமிழக அரசின் 'இல்லம் தேடி கல்வி' - ரூ.1000 ஊக்கத்தொகை & ரூ. 25 ஆயிரம் பரிசு! முழு விவரம் இதோ!
தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ – ரூ.1000 ஊக்கத்தொகை & ரூ. 25 ஆயிரம் பரிசு! முழு விவரம் இதோ!

கொரோனா பேரலை தாக்கம் உருவாக்கிய கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதத்தில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு உருவாகியுள்ளது. இதற்கான ஊக்கத்தொகை மற்றும் பரிசு உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

புதிய கல்வி திட்டம்

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்த கால இடைவெளியில் மாணவர்கள் இழந்து போன கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது.

Facebook செயலியின் பெயர் மாற்றம்? பயனர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி, மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் துவங்கும் இத்திட்டம் வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1 முதல் ஒன்றரை மணிநேரம் வரையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

இதனுடன் புதிய கல்வித்திட்டத்துக்காக ரூ.200 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் குறித்து விரிவாக காணலாம்.

  • அதில் முதலாவதாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்வது.
  • பள்ளிகள் நடைபெறாத நேரங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் சிறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.
  • மாணவர்கள் பள்ளியில் கற்றுக்கொண்ட திறன்களை இல்லம் தேடி கல்வி திட்டம் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.
செயல்பட்டு குழு:
  • இப்போது ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை செயல்படுத்த மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 செயல்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
  • மேலும் பாடங்களை கற்பிக்கும் பணிகள் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் மூலம் கொடுக்கப்படும்.
  • இந்த திட்டத்தின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சைக்கிள்பேரணி, வீதி நாடகம், பொம்மலாட்டம், கதைசொல்லுதல் மற்றும் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தகுதிகள்:
  • பாடங்களை கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான தகுதிகளை பொருத்தளவு, 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சியும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தவர இந்த தன்னார்வலர்கள் வாரத்தில் ஆறு மணி நேரம் வரை இந்த பணியில் செலவிட வேண்டும்.
  • தமிழ் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
  • தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
    17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு செயல்முறை:
  • இந்த திட்டத்தில் சேவையாற்ற விரும்பும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தன்னார்வலர்களும் illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த செயல்முறை கடந்த 18ம் தேதி முதல் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகை:

பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்துவதற்கு லோகோ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லோகோ உருவாக்கத்துக்காக சிறப்பு போட்டி ஒன்று நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில் அனைத்து நகர், ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் தனி நபராக அல்லது குழுவாக பங்கேற்கலாம். இதற்கான வயது வரம்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு – அக்.22 கடைசி நாள்!

இந்த போட்டிக்கான படைப்புகளை போட்டியாளர்கள் [email protected] என்ற முகவரிக்கு வரும் 24ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறந்த லோகோவை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் இறுதி செய்யும். அந்த வகையில் சிறப்பான மற்றும் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு உருவாக்கப்படும் சின்னங்களுக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!