கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் – அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

0
கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் – அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு சிறிய அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு தற்போது கூகுள் நிறுவன அலுவலகத்தில் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனம்:

உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுவது தான் கூகுள் தேடுதளம் ஆகும். இந்த கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை ஆவார். இந்த கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சிறந்த வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்நிறுவனம் மூடப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையை அறிவித்தது.

சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!

அதன்படி தற்போது ஊழியர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனர் ஹைபிரிட் வொர்கிங் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஊழியர்கள் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது நிறுவனத்தில் இருக்கும் அன்றாட வேலைகளான கதவு திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது உள்ளிட்ட சிறிய பணிகளை செய்ய ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!

இவ்வாறாக இந்த பணிகளை மேற்கொள்ள 100 ரோபோக்கள் இறக்கப்பட்டு அந்த அலுவலகத்தில் உலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரோபோக்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக இந்த மாதிரி ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள் தற்போது கூகுள் நிறுவன அலுவலகத்தில் வலம் வருகின்றன என்று ரோபோவின் தலைமை அலுவலர் Hans Peter Brondmo கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!