10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்பட வேண்டிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் ரத்து:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய பாதிப்பு 2.95 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல மாநிலங்களில் 15 நாட்கள், ஒரு வாரங்கள் என பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
முழு இந்தியாவை பொறுத்தவரை புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இது குறித்து அவர் கூறுகையில், பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.