TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!

1
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய நிதியாண்டில் திட்டம்!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய நிதியாண்டில் திட்டம்!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்ந்து வரும் குறைப்பு விகிதங்களுக்கு மத்தியில் முன்னணி IT நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ மற்றும் HCL டெக்னாலஜிஸ் ஆகியவை சுமார் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

சமீபத்திய ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) புதிய வேலைவாய்ப்புகளின் விகிதம் உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் நான்கு முக்கிய IT துறை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், விப்ரோ மற்றும் HCL டெக்னாலஜிஸ் ஆகியவை வேலைவாய்ப்புகளை அளிப்பதில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இது தவிர இந்நிறுவனங்களின் குறைப்பு விகிதங்கள் உயர்ந்துள்ள நிலையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவர்களை நியமிக்க திட்டமிட்டு வருகிறது.

Android, iOS பயனர்களின் கவனத்திற்கு – நவ.1 முதல் WhatsApp செயல்படாது?

இது தொடர்பான அறிவிப்புகள் இந்நிறுவனங்களின் காலாண்டு வருவாய் புதுப்பிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய IT நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் சுமார் 1,20,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் ஏற்கனவே இந்தியாவின் மொத்த IT திரை பணியாளர்களில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் TCS விப்ரோ, HCL டெக்னாலஜிஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவை இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,02,517 பேரை புதிதாக இணைத்துள்ளது.

இருப்பினும் அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இவை முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கை குறித்து TCS இன் தலைமை HR ஆஃபர் மிலிந்த் லக்காட் கூறுகையில், ‘கடந்த ஆறு மாதங்களில் 43,000 புதிய பட்டதாரிகளை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம். சொந்த திறமைகளை உருவாக்குவதற்கு முன்கூட்டியே முதலீடு செய்வது, சப்ளை பக்கம் இருக்கும் சவால்களை சமாளிக்கவும், எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றத் திட்டங்களை செயல்படுத்தும் காலக்கெடுவை சந்திக்கவும் இது உதவியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!

மேலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் 35,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதாகவும், அதன் மூலம் மொத்த நிதியாண்டில் 78,000 பேரை பணியமர்த்துவதாகவும் TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இதனுடன் கடந்த காலாண்டில் 8.6 சதவிகிதமாக இருந்த TCS நிறுவனத்தின் குறைப்பு விகிதம் தற்போது 11.9 சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, ‘நாங்கள் காணும் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது.

கடைசியாக இதுபோன்ற தேவை 2010ம் ஆண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்தது’ என்று புதிய வேலைவாய்ப்புகள் குறித்து தலைமை இயக்க அதிகாரி யுபி பிரவின் ராவ் கூறியுள்ளார். இந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் 13.9 சதவீதமாக இருந்த தேய்வு விகிதம், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 20.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் விப்ரோ தனது இரண்டாவது காலாண்டு வருவாய் அறிவிப்பின் போது, கல்லூரி ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் மூலம் 8,100 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச நேரடி பயிற்சி!

இப்போது விப்ரோ அதன் புதிய வேலைவாய்ப்புகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தியரி டெலாபோர்ட் தெரிவித்துள்ளார். மேலும் HCL டெக்னாலஜிஸ், இந்த ஆண்டு கல்லூரி வளாகங்களில் இருந்து சுமார் 20,000 முதல் 22,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் புதிதாக 30,000 பேரை சேர்க்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!