பிரமாண்டமாக நடக்கவுள்ள ஜீ தமிழ் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” இறுதி சுற்று – சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர்!

0
பிரமாண்டமாக நடக்கவுள்ள ஜீ தமிழ்
பிரமாண்டமாக நடக்கவுள்ள ஜீ தமிழ் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" இறுதி சுற்று - சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர்!
பிரமாண்டமாக நடக்கவுள்ள ஜீ தமிழ் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” இறுதி சுற்று – சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர்!

ஜீ தமிழில் நடன திறமையை காட்ட நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் “டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4”. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று அடுத்த வாரம் வர இருக்கும் நிலையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நடன திறமையை வெளியே கொண்டு வர தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நடன நிகழ்ச்சியின் நடுவர்களாக பாபா மாஸ்டர், சங்கீதா, சினேகா ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அரை இறுதி சுற்றி முடிவடைந்து இறுதி சுற்று வந்துள்ளது.

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? சீசன் 1 போட்டியாளர் கணித்த தகவல்!

Exams Daily Mobile App Download

இறுதி சுற்றில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4ன் இறுதி சுற்று வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இறுதி சுற்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தான் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என தெரிவிக்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் வெற்றியாளர் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!