YouTube சேனல் மூலம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் பிரதமர் மோடி – ஷாக் ரிப்போர்ட்!

0
YouTube சேனல் மூலம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் பிரதமர் மோடி - ஷாக் ரிப்போர்ட்!
YouTube சேனல் மூலம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் பிரதமர் மோடி - ஷாக் ரிப்போர்ட்!
YouTube சேனல் மூலம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் பிரதமர் மோடி – ஷாக் ரிப்போர்ட்!

உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட சமூக வலைதளங்களில் யூடியூப் ஒன்று. அத்தகைய யூடியூப் மூலம் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் ஒரு மாத வருமானம் குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

யூடியூப் வருமானம்:

உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் யூடியூப் ஒன்று ஆகும். இந்த யூடியூப் தற்போது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது பெரும்பாலானோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வலைத்தளமான யூடியூப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்து அவற்றை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

ஜனவரி 10 முதல் 15 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

அந்த வகையில் சமைக்க தெரிந்தவர்கள் சமையல் வீடியோவும், நடனம் ஆட தெரிந்தவர்கள் நடன வீடியோவும் என தங்களுக்கு தெரிந்த மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வருமானமும் பெற்று வருகின்றனர். அத்தகைய யூடியூப் சேனல் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும் தொடங்கி பயன்படுத்தி வருகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தின் முதலமைச்சகராக இருந்த காலத்தில் அதாவது 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த யூடியூப் சேனலில் அவர் ஆற்றும் உரைகள், நிகழ்வுகள் மற்றும் யோகா உள்ளிட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பரிசோதனை தீவிரம்!

யூடியூப் பொறுத்தவரை வீடியோ, பார்வையாளர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 1000 பார்வையாளர்களுக்கு 3 டாலர் முதல் 7 டாலர் வரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் யூடியூப் சேனலுக்கு 9.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றனர். இந்த யூடியூப் சேனல் மூலம் மோடி மாதத்துக்கு 12,000 டாலர் முதல் 1,99,500 டாலர் (இந்திய மதிப்பில் ஒருகோடிக்கு மேல்) வரையும், ஆண்டுக்கு 1,44,600 டாலர் முதல் 2.4 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு 75 என்று கணக்கிட்டு அவரது வருமானத்தை தெரிந்துகொள்ளலாம்.

அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்துக் கணக்கைப் பொது தளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கொண்டுவந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களின் இந்த ஆண்டுக்கான சொத்து விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து விபரத்தில் யூடியூப் சேனலின் வருமானம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!