டிச.27 முதல் ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail செயல்பட தடை? அதிரடி அறிவிப்பு!

0
டிச.27 முதல் ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail செயல்பட தடை? அதிரடி அறிவிப்பு!
டிச.27 முதல் ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail செயல்பட தடை? அதிரடி அறிவிப்பு!
டிச.27 முதல் ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail செயல்பட தடை? அதிரடி அறிவிப்பு!

டிசம்பர் 27ம் தேதி முதல் குறிப்பிட்ட வெர்ஷன் ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் சேவைகள் கிடையாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு போன்:

நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக மொபைல் போன் அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு போன் பெரும் பங்காற்றி வருகிறது. மக்கள் தங்கள் மொபைல் போனில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் என பல்வேறு கூகுள் செயலியை பயன்படுத்தி வருகிறது. செல்போன் நிறுவனங்கள் பல இயங்கி வரும் நிலையில் மாதம் ஒரு மாடல் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் தங்களது பழைய ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – நாள்தோறும் 7.5 லட்சம் பேர் பயணம்!

இவ்வாறு பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்டு 2.3.7 போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் என எதையும் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. பழைய ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp சேவை நிறுத்தப்பட்டது தொடர்ந்து கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கிறது. அதனை தொடர்ந்து டிசம்பர்.27ம் தேதி முதல் கூகுள் கணக்கு மூலம் ஆண்ட்ராய்டு 2.3.7 ல் பயனர்கள் உள்நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நுழைபவர்களின் Password Error காண்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் – நெட்டிசன்கள் வரவேற்பு!

அது சரியான Password ஆக இருந்தாலும் Error காண்பிக்கப்படும். பயனர்கள் கூகிளின் சேவைகளை பெற விரும்பும் பட்சத்தில் குறைந்தபட்சம் 3.0 Honeycomb ஆண்ட்ராய்டு பதிப்பை கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பதிப்புகளை கொண்ட யூஸர் மற்றும் ஜிமெயில் அக்கவுண்ட் மூலம் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது. பயனர்கள் புதிய மொபைல் போன் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!