‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி வெண்பாவாக யாரடி நீ மோகினி சைத்ரா – ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இனி வெண்பாவாக யாரடி நீ மோகினி சைத்ரா - ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இனி வெண்பாவாக யாரடி நீ மோகினி சைத்ரா - ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி வெண்பாவாக யாரடி நீ மோகினி சைத்ரா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அவருடைய ரோலில் சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஷாக்:

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல்களில் வெண்பா கதாபாத்திரத்தில் சிறந்த இளம் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. இந்நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேற போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது கூட இந்த சீரியலில் இருந்து விலகாமல் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்ட் கார்டு – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இந்நிலையில் வெண்பா கதாபாத்திரம் தற்போது சீரியலில் டம்மியாக மாறிவிட்டது. தொடக்கத்தில் பாரதி, கண்ணம்மாவை பிரிக்கும் வேலைகளில் பல வில்லத்தனமான வேலைகளை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பரீனா. இவர் சமீப காலமாக சீரியலில் இல்லாத போது கூட, சீரியலில் ஒரு பரபரப்பு இல்லை என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இவர் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டைலர் சீரியலில் நடித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் கணிப்பு!

இதனால் பாரதி கண்ணம்மாவில் இருந்து பரீனா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் யாரடி நீ மோகினி சீரியல் மற்றும் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவில் இருந்து இவர் வெளியேற உள்ளதாக வந்த தகவல் பற்றி பரீனா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!