உஷார் நிலையில் மாநிலங்கள்.. இந்தியாவில் கொடிய XBB.1.5 வைரஸ் கண்டுபிடிப்பு.. கட்டுப்பாடுகள் அமல்!

0

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தற்போது மிகவும் ஆபத்தான XXB.1.5 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் கண்டுபிடிப்பு:

கடந்த 2022ம் ஆண்டு கொரோனா என்ற வார்த்தை உலக மக்களின் காதில் பெரிய அளவில் ஒலிக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனாவில் மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது. இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாநில அரசு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை வகுத்து இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் குஜராத்தில் XXB.1.5 என்ற ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் தான் இந்த முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தான் அமெரிக்காவில் தற்போது பரவியுள்ள பாதி கொரோனா நோய் தொற்றுக்கு காரணம்.

பொது மக்களுக்கு 2023ம் ஆண்டின் முதல் நாளே ஷாக்.. கடும் உயர்வை எட்டிய கேஸ் சிலிண்டர் விலை!!

இந்த வைரஸால் குறைந்த நாட்களிலேயே தொற்று எண்ணிக்கை அங்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் குஜராத் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் விமான நிலையங்களில் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஜனவரி மாதத்தில் அனைத்து மாநில அரசுகளும் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!