உலக யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு விநாடி – வினா போட்டி

0
உலக யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டி
உலக யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டி

உலக யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு விநாடி – வினா போட்டி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. நம் இந்தியாவிலும் இந்த நாளில் யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அன்றைய நாளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விநாடி – வினாவை ஆன்லைனில் என்சிஇஆர்டி நடத்துகிறது. ஆண்டுதோறும் உலக யோகா தினத்தை முன்னிட்டு ‘யோகா ஒலிம்பியாட்’ என்ற யோகா போட் டியை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
கரோனாவால், இந்த ஆண்டுக்கான போட்டியை விநாடி – வினாவாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது.

‘உடல்நலம் மற்றும் நல்லிணக்கத்துக்கான யோகா’ என்ற தலைப்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது. யமா, நியமா, ஷட்கர்மா /கிரியா, ஆசனங்கள், பிராணா யாமா, தியானம் பந்தா, முத்ரா உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21-ம் தேதி முதல் ஜூலை 20 வரை போட்டி நடைபெறும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவி கள் பங்கேற்கலாம். மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய முகவரியினை அணுகலாம்.

Know More Details 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!