ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை, திருக்குறள் ஓவியப்போட்டிக்கான அறிவிப்பு – உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு!!

0
ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை, திருக்குறள் ஓவியப்போட்டிக்கான அறிவிப்பு - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு!!
ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை, திருக்குறள் ஓவியப்போட்டிக்கான அறிவிப்பு - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு!!
ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை, திருக்குறள் ஓவியப்போட்டிக்கான அறிவிப்பு – உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு!!

உலக பொதுமறையான திருக்குறளை சிறப்பிக்கும் விதத்தில் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு நடத்தப்படும் போட்டிக்கான படைப்புகளை வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் ஓவிய போட்டி:

தமிழனின் உலக சிறப்பு மிக்க நூல்களில் ஒன்றான திருக்குறள் சிறப்பினை போற்றும் வகையில் திருக்குறள் ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் உலக பொதுமறையாக கருதப்படுகிறது. உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறளை சிறப்பிக்கவும், அனைத்து மக்களுக்கும் எளிதாக உணரவைக்க 2013-ஆம் ஆண்டு திருக்குறள் ஓவியக்காட்சி கூடம் அமைக்கப்பட்டது.

தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

இந்த கூட்டத்தில் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் தொடர்பான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் ஓவியப்போட்டி அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஓவிய போட்டிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் திருக்குறள் மற்றும் அதன் பொருள் குறித்து ஓவியங்கள் நடுவர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான 15 படைப்புகளுக்கு தலா ரூ.40,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் பரிசுகள் வழங்கப்படும்.

பி.டெக்., இன்ஜினியரிங் பட்டங்கள் செல்லும் – தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!!

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படைப்பாளிகள் தங்களின் ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
இயக்குனர்,
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்,
2-ஆம் முதன்மை சாலை,
மைய தொழில்நுட்ப பயிலாக வளாகம்,
தரமணி,
சென்னை-600113

இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இது குறித்து எதாவது சந்தேகம் இருந்தால் 044-22542992 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!