பணிசுமையை குறைத்தால் ஊதிய குறைப்பை ஏற்க தயார் – வெளியான அறிக்கை முடிவுகள்!

0
பணிசுமையை குறைத்தால் ஊதிய குறைப்பை ஏற்க தயார் - வெளியான அறிக்கை முடிவுகள்!

இந்தியாவில் உள்ள நிறுவன ஊழியர்களிடம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளது. ஆய்வின் முடிவில் பலதரப்பட்ட கருத்துக்களும் உள்ளது பொதுவாக ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

ஆய்வு முடிவுகள்:

பணியாளர்களின் உற்பத்தி திறன் மற்றும் ஈடுபாட்டின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் யுகேஜி என்ற உலகளாகிய நிறுவனமானது இந்திய நிறுவன ஊழியர்களிடம் ஆய்வுகளை நடத்தி உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மொத்தம் 72% ஊழியர்கள் தங்கள் மேலாளரின் ஆதரவு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், நேரடியாக மேல் இடத்திற்கு செல்லும் வகையில் பணியாற்ற தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். 88% ஊழியர்கள் தங்கள் மேலாளர்கள் பலதரப்பட்ட கண்ணோட்டத்தை மதிப்பதாக தெரிவித்துள்ளனர். 78% பணியாளர்கள் ஏதோ ஒரு வகையிலான வேலை விரக்தியை அனுபவித்து வருவதாகவும், இது உடல் மற்றும் உணர்ச்சி சோர்வுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

NMDC நிறுவனத்தில் நேர்காணல் – 200+ காலியிடங்கள் || ITI / Diploma முடித்தவர்களுக்கு அழைப்பு!!!

இந்தியாவை சேர்ந்த 64% ஊழியர்கள் பணி சுமையை குறைத்துக் கொண்டால் ஊதிய குறைப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் 76% பணியாளர்கள் பணி என்பது வெறும் வேலை என்பதை விட மேலானதாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருப்பதாக உணர்கின்றனர். மேலும் 75% நபர்கள் விளைவுகளை பொருட்படுத்தாமல் புதிய வழிமுறை முயற்சிக்கும் நபர்களை தங்கள் நிறுவனம் ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் பணியாளர்கள் இடையே நிலவும் பலதரப்பட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!