இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் – ஷாக்கிங் ரிப்போர்ட்!

0
இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் - ஷாக்கிங் ரிப்போர்ட்!
இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் - ஷாக்கிங் ரிப்போர்ட்!
இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் – ஷாக்கிங் ரிப்போர்ட்!

இந்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும் கூகுளில் சர்ச் எஞ்சினில் அதிகம் சர்ச் செய்யப்பட்டது பற்றிய விவரங்களை அந்நிறுவனம் வெளியிடும். தற்போது நடப்பாண்டுக்கான சர்ச் எஞ்சினில் அதிகம் சர்ச் செய்யப்பட்டது பற்றி விரிவாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுளின் சர்ச் எஞ்சின்

ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டில் உள்ள மக்கள் கூகுளின் சர்ச் எஞ்சினில் எதனை அதிகம் சர்ச் செய்யதுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடும். இதன் மூலமாக ஒரு நாட்டில் உள்ள மக்களின் மனநிலை பற்றி கண்டறிய முடியும். மேலும் அந்த நாட்டில் அதிகமாக பேசப்பட்டது பற்றியும் அறிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் சினிமா, ஸ்போர்ட்ஸ், அரசியல் தொடர்பான விஷயங்கள் அதிகம் சர்ச் செய்யப்பட்டது. அதாவது சினிமா பிரபலங்கள் பற்றி அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் அவர்களின் வயது, ஜாதி உள்ளிட்ட தகவல்களை தேடுவார்கள்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு – இணைப்பதிவாளர் அறிவிப்பு!

ஆனால் இந்த வருடம், இந்தியாவில் இது போன்ற தகவல்கள் இடம் பெறவில்லை. மேலும் முதல்முறையாக கூகுளில் மக்கள் ஒரு வருடம் முழுக்க கொரோனா குறித்தும் தடுப்பூசிகளை குறித்தும் தான் அதிகம் சர்ச் செய்துள்ளனர். அதன்படி இந்தியாவில் முதல் 3 இடங்களை பிடித்த விஷயங்கள், முதலாவதாக கொரோனா தடுப்பூசிகளை பெற எப்படி ரிஜிஸ்டர் செய்வது? அடுத்ததாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவை எப்படி அதிகரிப்பது? என்றும் மக்கள் அதிகளவு சர்ச் செய்துள்ளனர்.

ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கொரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் இன்றி மிகவும் கஷ்டப்பட்டனர். இதன் விளைவாக கூகுளில் ஆக்சிஜன் குறித்து அதிகம் சர்ச் செய்துள்ளனர். இவ்வாறு மக்களின் கஷ்டத்தையும் இந்தியா கடந்து வந்த பாதையும் கூகுளின் சர்ச் எஞ்சின் எடுத்துரைக்கிறது. இதற்கு அடுத்ததாக கிரிப்டோகரன்சி பற்றியும் பலர் தேடியுள்ளனர். இது போக கூகுளின் சர்ச் எஞ்சினில் அடுத்ததாக இடம் பிடித்த விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைப்பது எப்படி?
  • வீட்டிலேயே ஆக்ஸிஜன் தயாரிப்பது எப்படி?
  • இந்தியாவில் dogecoin வாங்குவது எப்படி?
  • வாழைப்பழ ப்ரட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  • ஐ.பி.ஓவில் உள்ள ஒதுக்கீடு நிலவரத்தை எப்படி சோதிப்பது?
  • பிட்காயினில் எப்படி முதலீடு செய்வது?
  • மதிப்பெண்களுக்கான சதவீதத்தை எப்படி கண்டுபிடிப்பது?

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!