தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு – இணைப்பதிவாளர் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு - இணைப்பதிவாளர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு – இணைப்பதிவாளர் அறிவிப்பு!

விழுப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செயலாக்க காலம் நீட்டிப்பு:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் குறைவான வட்டியில் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வசதிகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சட்டமனற தேர்தலின் போது திமுகவினர் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நகை அடகு வைத்தவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.

5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.26ம் தேதி வரை விடுமுறை – அரசு அறிவிப்பு!

கூட்டுறவு சங்க அதிகாரிகள் நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து 32 வகையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானவர்களின் பட்டியலும் வெளியானது. இதனை எதிர்த்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித நிபந்தனைகளும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

அதன்படி ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 10 தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 31.3.2014 ஆண்டு நிலவரப்படி, தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான செயலாக்க காலம் 31.12.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 42 பேர் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1,47,27,000 செலுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்கனவே 25% கடன் தொகை செலுத்தியவர்கள் மீதமுள்ள தொகையை செலுத்த ஏதுவாகவும், இதுவரை இத்திட்டத்தில் சேராதவர்கள் சேர்ந்து ஒரே தவணையில் முழுமையாக வங்கிகளில் கடனை செலுத்தலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!