TNPSC Group 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

0
TNPSC Group 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
TNPSC Group 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
TNPSC Group 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

TNPSC குரூப் 2:

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து வரிசையாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் 5413 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வில் சில பதவிகளுக்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வானது நடைபெறும். சில தேர்வுகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நடைபெற்று நியமனம் செய்யப்படும்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

அதன்படி முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 11,78,000 பேர் விண்ணப்பித்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். முன்னதாக TNPSC வெளியிட்ட அறிவிப்பின் படி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வில் ஆதிதிராவிடர் (எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலியாக உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு எழுதியவர்களில் இருந்து 10 மடங்கு பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விடைகள் மூலமாக தேர்வர்கள் தங்களை முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக TNPSC குரூப் 4 தேர்வு வருகிற 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த பின் குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!