வாட்ஸ்அப் செயலியில் செய்திகளை தேட வேண்டுமா? இதோ வந்தாச்சு புதிய அப்டேட்!

0
  வாட்ஸ்அப் செயலியில் செய்திகளை தேட வேண்டுமா? இதோ வந்தாச்சு புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியானது தேதியை பயன்படுத்தி செய்திகளை தேடுவதற்கான புதிய வழிமுறையை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

இக்கால கட்டத்தில் வாட்ஸ் அப் செயலியை இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களது பொழுது போக்கிற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மக்களை தன் வசம் வைத்திருக்க வாட்ஸ்அப் செயலியானது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது “தேதி வாரியாக தேடல்” வசதியை பயனர்களுக்காக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பயன்படுத்தி பயனர்கள் தேட விரும்பும் அரட்டையில் அல்லது குழுவில் தேதி வாரியாக அனுப்பிய செய்தியை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

வருவாய் அலுவலர்கள் பணியிறக்கம் ரத்து – தமிழக அரசின் அரசாணை!

மேலும் இந்த வசதியை பயன்படுத்தி குறிப்பிட்ட தேதியில் அனுப்பிய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்குமெண்ட்களையும் பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியானது ஐஓஎஸ், மேக் டெஸ்க்டாப் மற்றும் வாட்ஸ்அப் வெப் போன்றவற்றில் முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தது, தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் விருப்ப அரட்டையில் அல்லது குழுவில் உள்ள “Search Bar”-ஐ கிளிக் செய்ய வேண்டும். பிறகு Search Bar-ல் உள்ள நாள்காட்டி குறியீட்டை தேர்வு செய்து விருப்ப தேதியை தேர்வு செய்து ok பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!