WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – டைப்பிங் பாரில் பேமண்ட் பட்டன்!
WhatsApp மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது டைப்பிங் பாரில் பேமண்ட் பட்டன் அமைக்கும் வசதி ஏற்படுத்தி உள்ளது WhatsApp நிறுவனம்.
பேமண்ட் பட்டன்:
மொபைல் போனில் WhatsApp ன் பங்கு இன்றியமையாதது. மக்கள் அனைவரும் அதிகமாக WhatsApp பயன்படுத்துவதால் அடிக்கடி பல்வேறு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சேட் பாரில் பேமண்ட் பட்டன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் சேட் பாரில் இருந்து பணம் செலுத்தலாம். WhatsApp மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பயனர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது.
‘பிறந்தநாளுக்கு தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்!
இதனை தொடர்ந்து சேட் பாரில் பேமண்ட் பட்டன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்ட்களுக்கு அணுக கிடைக்கிறது. இந்த ஷார்ட்கட் ஆனது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.21.1 க்கான WhatsApp பீட்டாவின் பகுதியில் பயன்படுத்த முடியும். இந்த சிறப்பம்சமானது அட்டாச்மெண்ட் மற்றும் கேமரா பட்டனுக்கு இடையே அமைந்திருக்கும். அதனால் எளிதில் தேர்வு செய்து பணத்தை அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
WhatsApp மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்றால் அட்டாச்மெண்ட் ஐகானைக் கிளிக் செய்து பின்னர் பேமென்ட் வசதியை தேர்வு செய்யலாம். அதாவது டாக்குமெண்ட் கேமரா, கெளரி, ஆடியோ ஆகியவற்றின் வரிசையில் அமைந்திருக்கும். iOS பீட்டா டெஸ்ட்களுக்கும் இந்த ஷார்ட்கட் கிடைக்கும் என WaBetaInfo அறிக்கை கூறுகிறது. WhatsApp பேமண்ட்ஸ் அம்சமானது National Payments Corporation of India (NPCI) உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. 227க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் நிகழ்நேர கட்டண செயல்முறையை வழங்குகிறது. அனைவரும் இதை எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.