‘பிறந்தநாளுக்கு தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்!

0
'பிறந்தநாளுக்கு தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்!
'பிறந்தநாளுக்கு தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்!
‘பிறந்தநாளுக்கு தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆகஸ்ட் 25ம் தேதி தனது பிறந்தநாள் அன்று தொண்டர்கள் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக தலைவர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது. இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 25ம் தேதி தான் பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M32 5G – விலை, சிறப்பம்சம் அறிவிப்பு!

மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஓரளவு கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தான் இருக்கும் இடத்திலேயே மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!