‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஐஸ்வர்யா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஐஸ்வர்யா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி இருவரும் ஷூட்டிங்கில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிடும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பாச போராட்டங்கள் என அனைத்தையும் இந்த சீரியல் அப்படியே பிரதிபலிப்பதால் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். டிஆர்பியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த தொடரில் தனம் கதாபாத்திரத்தில் சுஜிதாவும், மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்துவும், ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட்டும், கதிர் கதாபாத்திரத்தில் குமரனும், மீனா கதாபாத்திரத்தில் ஹேமா ராஜ்குமாரும், முல்லை கதாபாத்திரத்தில் காவ்யாவும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரியும் நடித்து வருகிறார். சீரியலில் நடித்தது போக மீத நேரம் முழுவதையும் அரட்டை அடித்து தான் போக்குகிறார்கள். அவ்வப்போது ஷூட்டிங்கின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சித்ராவை கொலை செய்தது ஹேம்நாத் தான், அவள் தற்கொலை செய்யவில்லை – தாயார் பரபரப்பு பேட்டி!

இதுமட்டுமல்லாமல் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ஷூட்டிங்கில் எடுக்கப்படும் வீடியோ, உணவு என அனைத்தையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஷூட்டிங்கில் ஹேமா, சாய் காயத்ரி என அனைவரும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிடும்படியான வீடியோ சமூக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவினை பார்த்த பலரும் என்னென்ன அலப்பறை செய்கிறார்கள் பாருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here