சித்ராவை கொலை செய்தது ஹேம்நாத் தான், அவள் தற்கொலை செய்யவில்லை – தாயார் பரபரப்பு பேட்டி!

0
சித்ராவை கொலை செய்தது ஹேம்நாத் தான், அவள் தற்கொலை செய்யவில்லை - தாயார் பரபரப்பு பேட்டி!
சித்ராவை கொலை செய்தது ஹேம்நாத் தான், அவள் தற்கொலை செய்யவில்லை - தாயார் பரபரப்பு பேட்டி!
சித்ராவை கொலை செய்தது ஹேம்நாத் தான், அவள் தற்கொலை செய்யவில்லை – தாயார் பரபரப்பு பேட்டி!

திரையுலகில் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கவர்ந்த சித்ராவின் மரணம் தமிழகம் முழுவதும் கலக்கத்தை ஏற்படுத்தியது. சித்ரா கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மாட்டார். ஹேம்நாத் தான் கொலை செய்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் கதறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

சித்ராவின் மரணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் சித்ரா. மாடலிங் துறையிலும் சித்ரா ஆர்வம் காட்டி வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமான சில மாதங்களிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். ஒரு கலகலப்பான பெண்ணாக சமூக வலை பக்கங்களில் சுற்றி திரிந்து கொண்டிருந்த சித்ரா திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி திரையுலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exams Daily Mobile App Download

ஆனால், சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும் எனவும், உண்மையாகவே சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது சித்ரா கொலைசெய்யப்பட்டாரா என பல சந்தேகங்கள் எழுந்தது. இதனால் சித்ராவின் காதல் கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு, ஹேம்நாத் ஜாமினில் வெளிவந்தார். சித்ரா இறந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்கிற விஷயம் மட்டும் மர்மமாகவே இருந்தது. ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும் என சித்ராவின் நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா – ப்ரோமோ ரிலீஸ்!

சித்ராவின் அம்மாவும் தற்போது வரை சித்ராவை நினைத்து கதறி கொண்டிருக்கின்றனர். என் மகள் 10 பேர் வந்து நின்றாலும் கூட தைரியமாக இருப்பார். அவர் எப்படி தற்கொலை செய்திருப்பார். ஹேம்நாத் தான் என் பெண்ணை கொலை செய்திருக்க வேண்டும். சித்ராவை கொலை செய்துவிட்டு துளி கூட வருத்தமில்லாமல் பல பெண்களுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கிறார் என சித்ராவின் மரணம் குறித்து பெற்றோர்கள் கதறும்படியான வீடியோ அனைவரின் மனதையும் நடுங்க வைக்கிறது. சித்ராவின் மரணம் குறித்தான தெளிவான தீர்ப்பு எப்போது தான் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here