கேரளாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலிலும், பொதுமக்களது கோரிக்கைகளின் அடிப்படையில் கேரளாவில் வார இறுதியில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கை திரும்பி பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு ரத்து
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஏறத்தாழ 2 மாதங்களாக கேரளாவில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் இறுதியில் இருந்து கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வந்ததால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க மாநில அரசு முடிவு செய்தது. எனினும் வார இறுதியில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு – நீதிமன்றம் உத்தரவு!
அந்த வகையில் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை கவனத்தில் கொண்டு சில பிரிவுகளின் கீழ் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து வகையான கடைகளும் வணிக நிறுவனங்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா 2 ஆம் அலை பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களும், வர்த்தகர்களும் அரசுக்கு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
அதாவது முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது என்றும் இந்த முழு ஊரடங்கு நடவடிக்கைகள் தேவையற்றவை என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் கேரளா அரசு வார இறுதி ஊரடங்கை ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.