SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் அபராதம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இதை செய்யாவிட்டால் அபராதம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இதை செய்யாவிட்டால் அபராதம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் அபராதம்!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது பான் அட்டையை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை எவ்வாறு எளிமையாக செய்து முடிக்கலாம் என்று கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பான் இணைப்பு:

மத்திய அரசின் நாட்டில் நிலவி வரும் பண பரிவர்த்தனைகள் நாடாகும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக அனைத்து பான் அட்டைகளையும் பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பான் அட்டை மூலமாக தான் நமது அனைத்து பரிவர்தனைகளும் கண்காணிக்கப்படுகிறது. வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் அனைத்து பரிவர்த்தனைகளை சோதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களை இந்த செயல்முறையை முடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு மற்றும் பான் இணைப்பை விரைந்து செய்து கொள்ளவும், அவ்வாறு செய்ய வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் எஸ்பி வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் பேங்கிங் முறை:
  • முதலில் பயனர்கள் http://www.onlinesbi.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், உள்ள “எனது கணக்குகள்” (My Accounts) என்ற பகுதியின் உள்ள Profile-PAN Registration என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, பான் எண்ணை உள்ளிட்டு கிளிக் செய்து, சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் கோரிக்கை செயலாக்கத்திற்காக கிளைக்கு அனுப்பப்படும்.
  • உங்கள் கோரிக்கை 7 நாட்களில் செயல்படுத்தப்படும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் விண்ணப்ப நிலை குறித்து தெரிவிக்கப்படும்.
  • நேரடி முறை:
  • உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் செல்ல வேண்டும்.
  • உங்கள் பான் கார்டின் நகலை எடுத்துச் செல்லுங்கள்.
  • இதற்கான கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மேலே உள்ளவற்றை பான் கார்டின் ஜெராக்ஸ் நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சரிபார்ப்புக்குப் பிறகு, இணைப்பு கிளை மூலம் செய்யப்படும்.
  • உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு விண்ணப்ப நிலை குறித்து தெரிவிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!