விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்ராவின் வளைகாப்பு விழா – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்துவின் ரசிகர்கள் சமீபத்தில் வெளியான வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜே சித்து:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போதைய நிலையில் உள்ள கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் குடும்பத்தினராக வரும் அனைவருக்கும் கதையில் சமமான அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. கிட்டத்தட்ட 4 வருடங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் – பரீனா வெளியிட்ட பதிவு!
சமீபத்தில் சில வாரங்களாக கதிர் முல்லை ஜோடியின் குழந்தை ஆசையை வைத்தும், தற்போது குழந்தை பற்றி அனைவரும் முல்லையிடம் கேட்பதால் முல்லை மிகவும் வருத்தத்தில் இருப்பது போலவும் காட்சிகள் வருகிறது. முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடிகை காவ்யா அறிவுமணி தான் நடித்து வருகிறார். ஆனால் அதற்கு முன்னதாக முல்லையாக விஜே சித்ரா தான் நடித்து வந்தார். எதிர்ப்பாராத விதமாக சித்ரா இறந்து விட்டதால் முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை – விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!
அந்த அளவிற்கு விஜே சித்து ரசிகர்கள் மனதில் முல்லையாக பதிந்து விட்டார். தற்போது அவரது நினைவு தினம் கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த போது கூட அனைவரும் சித்துவை நினைத்து பல பதிவுகளையும் வெளியிட்டனர். இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்துவின் முல்லை கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பது போலவும், அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவது போலவும் வீடியோ வெளியாகியுள்ளது.இதனை பார்த்து அவரது ரசிகர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.