விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் – பரீனா வெளியிட்ட பதிவு!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் - பரீனா வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் – பரீனா வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் பலர் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய நிலையில், அது குறித்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் பல புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து வருவதால் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி இருக்கின்றனர். இந்த சீரியல் தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவே மாறி இருக்கிறார்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை – விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!

அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். மேலும் பாரதி அகில் அவர்களின் தங்கையாக நடித்த ஸ்ருதி சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக கலக்கி வரும் காவ்யா அறிவுமணி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். மேலும் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி சீரியலில் இருந்து விலகுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் – உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். தற்போது வரை சீரியலில் பாரதி மற்றும் வெண்பா கதாபாத்திரம் மற்றும் மாற்றப்படவில்லை. வெண்பா கதாபாத்திரத்தில் பரீனா தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகிய நடிகர்கள் உடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அதில் அனைவரையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில் சீரியல் TRP இதனால் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!