‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை – விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை - விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை - விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநயை சீண்டிய தாமரை – விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!

தற்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் பிரஸ் மீட் டாஸ்கில் சில அநாவசியாமான கேள்விகளை கேட்டு அபிநயை சீண்டும் தாமரைக்கு, அவர் தக்க பதிலடி கொடுப்பது போல வெளியான ப்ரோமோ பார்வையாளார்களை கவர்ந்து வருகிறது.

பிக் பாஸ் அல்டிமேட்

ஒரு நாளின் 24 மணிநேரத்திற்கும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் பல்வேறு ஸ்வாரசியமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்ற அனைத்து ‘பிக் பாஸ்’ சீசனிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களின் எண்ணங்களும் சரி, பேச்சுகளும் சரி ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் மொத்தமாக மாறி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஓயாமல் வாயாடும் ஜுலி இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் சத்தமில்லாமல் இருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் – உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

அதே போல அனிதா, ஸ்ருதி, சினேகன் ஆகியோரும் எவ்விதமான அலட்டல்களும் இல்லாமல் தங்களது கேமை விளையாடி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல வனிதா, சுரேஷ் போன்றோர் அதிரடி போக்கை துவங்கி விட்டனர். இதில் ‘பிக் பாஸ்’ ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், கடந்த 5வது சீசனில் கலந்து கொண்டு எவ்விதமான பிரச்சனைகளிலும் தலையிடாமல் இருந்து வந்த போட்டியாளர் அபிநய் தற்போது முதல் முறையாக தாமரையை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார்.

இதுவரை ‘பிக் பாஸ்’ 5ல் எழுந்த பாவனி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கருத்து கூட கூறாமல் இருந்த அபிநய் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது ஆச்சரியத்தை உண்டு பண்ணி இருக்கிறது. அதாவது, ‘பிக் பாஸ்’ சீசன் 5க்கு பிறகு என்ன செய்கிறீர்கள் என்று அபிநயை பார்த்து தாமரை நக்கலாக கேள்வி கேட்க 2 படங்களில் நடித்து வருவதாக அவர் பதில் அளிக்கிறார். தொடர்ந்து ‘பிக் பாஸ்’ ஷோவுக்கு வருவதற்கு முன்னாலும் படம் நடித்தீர்கள். இப்பவும் அதே தான் செய்கிறீர்களா என்று சொல்கிறார் தாமரை. அடுத்து, ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் நீங்கள் கலந்து கொண்ட போது எவ்வளவு பிரச்சனைகள் வந்தது.

விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய புலி – மனம் உருகி சொன்ன விளக்கம்!

இப்போது மீண்டும் பிக் பாஸ்’ அல்டிமேட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவி என்ன சொல்லி அனுப்பினார்கள் என்று அபிநயை பார்த்து தாமரை கேட்க இப்போது கடுப்பாகும் அபிநய் இதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று சுமூகமாக முடிக்கிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் கேள்விகள் கேட்கும் போது அபிநய் தன்னை முறைத்து பார்ப்பதாக தாமரை குற்றம் சாட்ட, நான் எங்கே வேண்டுமானாலும் பார்ப்பேன். நீங்கள் ஸ்ருதியிடம் கேள்வி கேட்கும் போது என் மீது ஏன் கவனம் செலுத்துகிறீர்கள் என்று அபிநயும் தன் பங்கிற்கு கறாராக பேசி விட இந்த காரசாரமான விவாதம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here