பாஸ்ட்டேக் மோசடி குறித்து வைரலாகும் வீடியோ – பேடிஎம் நிறுவனம் விளக்கம்! மக்கள் கவனத்திற்கு!

0
பாஸ்ட்டேக் மோசடி குறித்து வைரலாகும் வீடியோ - பேடிஎம் நிறுவனம் விளக்கம்! மக்கள் கவனத்திற்கு!
பாஸ்ட்டேக் மோசடி குறித்து வைரலாகும் வீடியோ - பேடிஎம் நிறுவனம் விளக்கம்! மக்கள் கவனத்திற்கு!
பாஸ்ட்டேக் மோசடி குறித்து வைரலாகும் வீடியோ – பேடிஎம் நிறுவனம் விளக்கம்! மக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாமல் பாஸ்ட்டேக் மூலமாக தான் ரீசார்ஜ் செய்து அதன் மூலம் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் டோல்கெட் “பாஸ்டேக்” முறையில் மோசடி செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

பாஸ்ட்டேக் மோசடி:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படாமல் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் ரீசார்ஜ் முறையில் பணம் கழிக்கப்படும் முறை கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு பொதுவாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாஸ்டேக் மோசடி குறித்த வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் என பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் சிறுவன் ஒருவன் காரின் கண்ணாடியை துடைக்க அப்போது அவன் அணிந்து இருந்த ஸ்மார்ட் வாட்ச்சை பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் அருகே கொண்டு சென்றதும் அதில் சிவப்பு நிற லைட் எரிகிறது. உடனே அந்த சிறுவன் அங்கிருந்து கிளம்ப காரில் அமர்ந்து இருந்தவர்கள் அழைத்து பணம் வாங்கவில்லையா என கேட்கிறார்கள்.

பணம் கொடுங்கள் என அந்த சிறுவன் சொல்ல உன் வாட்சை காட்டு என அவர்கள் சொல்ல அந்த சிறுவன் அவர்களிடம் காட்டாமல் ஓடி விடுகிறான். பாஸ்ட்டேக் மூலமாக இப்படி மோசடி நடப்பதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ பார்த்த வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் சேவையை வழங்கும் பேடிஎம் நிறுவனம் இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதில் FASTagஐ ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஸ்கேனிங் செய்ய முடியும் என்பது போல தவறாகக் காட்டும் ஒரு காணொளியில், Paytm FASTag பற்றிய தவறான தகவல் பகிரப்படுகிறது. NETC வழிகாட்டுதல்களின்படி, FASTag கட்டண வசூல் முறையை, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் மட்டுமே தொடங்க முடியும். Paytm FASTag முற்றிலும் பாதுகாப்பானது என அதில் தெரிவித்துள்ளது. பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகள் திறந்தவெளி இணையத்தில் நடக்காது என இந்திய அரசின் தகவல் துறையான பிஐபியும் கூறியுள்ளது. மேலும் இந்த வீடியோ போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!