விரைவில் முடிய இருக்கும் விஜய் டிவியின் டாப் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் முடிய இருக்கும் விஜய் டிவியின் டாப் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிய இருக்கும் விஜய் டிவியின் டாப் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிய இருக்கும் விஜய் டிவியின் டாப் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் “பாரதி கண்ணம்மா” சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது தீவிரவாதி எபிசோடுகளில் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொள்வது போல் காட்சிகள் இருக்கும் நிலையில் சீரியல் முடிய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

பாரதி கண்ணம்மா:

ஒரு காலத்தில் விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து வந்தது. அந்த சீரியல் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என்ற கேள்விக்கு தமிழக மக்கள் விடை கேட்டு பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல தெரிகிறது. இந்நிலையில் தற்போது தீவிரவாதிகள் எபிசோட் காட்டப்பட்டு வருகிறது.

அதில் கண்ணம்மா, பாரதி மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என பாரதி புரிந்து கொள்வது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லி வெண்பாவிற்கும் சாரதிக்கும் இடையே எல்லாம் நடந்துவிட்டதால் வெண்பா வேற வழி இல்லாமல் சாரதியை திருமணம் செய்ய இருக்கிறார். அதனால் அவருடைய கதையும் முடிய இருக்கிறது. மேலும் லக்ஷ்மிக்கு ஹேமா தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரி என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

சன் டிவி சீரியல் வில்லிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

Exams Daily Mobile App Download

இப்படி அனைத்து உண்மைகளும் வெளியே வர இருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ஹேமாவும், லக்ஷ்மியும் பெரிய ஆட்களாக வளர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கதைகள் எல்லாம் காட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து உண்மை நிலவரம் தெரியாத நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய இருப்பது உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!