சன் டிவி சீரியல் வில்லிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

0
சன் டிவி சீரியல் வில்லிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு - வைரலாகும் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி சீரியல் வில்லிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு - வைரலாகும் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி சீரியல் வில்லிக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவி “ரோஜா” சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அக்ஷயா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜா சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் அந்த காலம் முதல் சீரியல் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சன் தொலைக்காட்சி தான். அந்த வகையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள் தான் டாப் வரிசையில் இடம் பெறுகின்றன. அதில் 1000 எபிசோடுகளை கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா சீரியல். இதில் தனது அத்தை மகள் என தெரியாமல் ஹீரோ ஹீரோயினை திருமணம் செய்து கொள்ள, அதன் பின் உண்மை தெரிய வந்து பல திருப்பங்கள் வருகிறது.

பல முறை கதை முடிவது போல காட்டப்பட்டாலும் கடைசியில் புது கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதையில் பெரிய மாற்றத்தை கொண்டு வருகின்றனர். தற்போது ஹீரோயின் ரோஜாவை இரண்டு வேடத்தில் காட்டி கதையை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றனர். இந்த சீரியலில் வில்லியாக நடிகை ஷாமிலி அணு ரோலில் நடித்து வந்தார். ஆனால் அவர் நிஜத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலை விட்டு விலகினார், அவருக்கு பதிலாக நடிகை அக்ஷயா வில்லியாக களமிறங்கினார்.

ஆண்டவா.. இவங்க எல்லாரையும் பிக் பாஸ் வீடு தாங்குமா? அதிரவைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நடிகை அக்ஷயாவும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால் சில நாட்களாக கதை திசைமாறி சென்று கொண்டிருக்கிறது. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் வைக்கப்படாமல் தினசரி எபிசோடுகள் கொண்டு செல்லப்படுகிறது. நடிகை அக்ஷயாவிற்கு கடந்த 8 ஆம் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது அவருடைய கணவருடன் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!