
ரோகிணியை ஏமாற்றி மாட்டிக் கொண்ட மனோஜ்.. விஜயா தலையில் விழுந்த இடி – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், முத்து வேலை இல்லாமல் இருப்பது ரோகிணிக்கு தெரிய வர, அவர் அவமானப்படுத்துகிறார். இந்நிலையில் மனோஜ் வேலைக்கு செல்லாமல் இருப்பது ரோகினிக்கு தெரிய வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து காரை வட்டிக்கு விடுபவர் எடுத்து சென்றுவிட்டதால், அவர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார். எப்படியாவது சம்பாரிக்க வேண்டும் என நினைத்து கார் துடைக்கும் வேலைக்கு கூட செல்கிறார். மீனாவும் எப்படியாவது முத்து காரை மீட்க வேண்டும் என பல முயற்சிகளை செய்கிறார். ஆனால் அதனால் பலன் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் நவ. 25 முதல் ஆவின் பால் விற்பனை நிறுத்தம் – நிர்வாகம் விளக்கம்!
இந்நிலையில் முத்து வேலை இல்லாமல் இருப்பது ரோகிணிக்கு தெரிய வருகிறது. அவர் விஜயாவிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறார். அதனால் அண்ணாமலை முத்து காரை மீட்க முயற்சி செய்கிறார். நிலைமை இப்படி இருக்க, மனோஜ் வேலைக்கு போகாமல் பார்க்கில் தூங்கி எழுந்து வரும் விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அவர் ஏமாந்து விட்டோம் என உணர்ந்து குடும்பத்தில் பிரச்சனை செய்கிறார். மேலும் மனோஜை அவர் பிரிய முடிவு செய்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.