கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் – அதிர்ச்சியில் முல்லை!

0
கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் - அதிர்ச்சியில் முல்லை!
கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் - அதிர்ச்சியில் முல்லை!
கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் – அதிர்ச்சியில் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆன நிலையிலும் குழந்தை பிறக்காத நிலையில், சீரியலில் ஒரு புதிய திருப்பம் வர உள்ளது. இந்த புதிய திருப்பத்தினால் கதையில் நிகழப்போகும் மாற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

கதிருக்கு திருமணம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை குழந்தை விஷயம் தான் மிகவும் சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முல்லைக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். ஆனால் முல்லை மட்டும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். முல்லை சில நாட்கள் அமைதியாக இருக்கும் நிலையிலும், மனதிற்குள் இதை பற்றியே யோசித்து வருகிறார். இதனால் ஒரு முடிவிற்கு வருகிறார். குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தன்னால் கதிர் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்.

விருதுகளை குவித்திருக்கும் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குடும்பத்தினர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதனால் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க வீட்டில் சொல்லுகிறார். முதலில் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பின்னர் முல்லை சொல்வது தான் சரி என்று ஒத்துக்கொள்கின்றனர். இதனால் கதிருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் கதிர் இதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கதிரை சம்மதிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

தனம் முதற்கொண்டு கதிரை மிகவும் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர். முல்லை தான் இந்த திருமணத்தை நடத்த சொல்லி இருக்கும் நிலையிலும், வேறு பெண்ணுடன் கதிருக்கு நடக்கும் திருமணத்தை முல்லையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் மிகவும் மனவருத்தம் அடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி வரும் எபிசோடுகள் இதனால் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here