விருதுகளை குவித்திருக்கும் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குடும்பத்தினர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விருதுகளை குவித்திருக்கும் விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் குடும்பத்தினர் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விருதுகளை குவித்திருக்கும் விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் குடும்பத்தினர் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விருதுகளை குவித்திருக்கும் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குடும்பத்தினர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலி விருதுகள் விழா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு பிடித்த பல பிரபலங்கள் இந்த முறை விருதுகளை வாங்கியுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

விருதுகளின் குவியல்:

ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. இதைப் போலவே சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் பாராட்டும் விதமாகவும், அங்கீகரிக்கும் விதமாகவும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் வழங்கப்படும் விஜய் டெலி விருதுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருப்பார்கள். நடப்பு ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடத்தப்படுகிறது.

தன்னை பற்றிய உருவ கேலிகளை தாண்டி சாதனை படைத்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ஆச்சர்யமளிக்கும் திரைப்பயணம்!

இதில் ஒவ்வொரு சீரியல் குடும்பத்தினரும் சேர்ந்து தங்களுக்கு வாக்களிக்கும் படி தனித்தனி குழுவாக மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தனர். இந்நிலையில், விஜய் டெலி விருதுகள் நேற்று நடந்திருக்கிறது. அதிகாரபூர்வமாக விருதுகளை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், விருதுகளை பெற்றவர்கள் அதனை தங்கள் சமூக வலைப்பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் அதிக விருதுகளை வாங்கியுள்ளது.

அதன்படி, சிறந்த நடிகைக்கான விருதை பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுசித்ரா பெற்றுள்ளார். சிறந்த வில்லன் கோபியாக நடிக்கும் சதீஸ் பெற்றுள்ளார். சிறந்த சப்போர்டிங் நடிகருக்கான விருதை எழிலாக நடிக்கும் விஜே விஷால் பெற்றுள்ளார். சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான விருதை ராதிகா வேடத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பெற்றுள்ளார். சிறந்த அப்பாவிற்கான விருதை ராமமூர்த்தி தாத்தா வேடத்தில் நடிக்கும் ரோசரி பெற்றுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!