
போட்டியில் வெற்றி பெற்ற பணத்தை கொடுக்கும் கதிர்.. முல்லைக்கு மீண்டும் டிரீட்மென்ட் தொடங்க நினைக்கும் தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் வந்ததை பற்றி ஜீவா மூர்த்தியிடம் சொல்கிறார். பின் கதிர் மூர்த்தி கடைக்கு வர அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் தனம் முல்லை ட்ரீட்மெண்ட் மீண்டும் தொடங்க வேண்டும் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா முகம் வாட்டமாக இருக்க மூர்த்தி என்ன ஆச்சு என கேட்கிறார். உடனே ஜீவா அந்த ஆளை பார்த்தேன் என ஜனார்தனனை சொல்கிறார். மூர்த்தி அவருடன் ஏன் நீ பேசுகிறாய் என கேட்க, நானும் எவ்வளவு தான் அமைதியாக இருக்க முடியும் என ஜீவா சொல்கிறார். அப்போது கதிர் கடைக்கு வர மூர்த்தியும் ஜீவாவும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். அண்ணாச்சி கதிரை கல்லாவில் அமர சொல்ல, ஆனால் கதிர் அதெல்லாம் வேண்டாம் என சொல்லி சின்ன சின்ன வேலைகளை பார்க்கிறார். மூர்த்தி அதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் எல்லாரும் வீட்டில் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க கண்ணன் கதிர் கடைக்கு சென்றது எப்படி இருந்தது என கேட்கிறார்.
Follow our Twitter Page for More Latest News Updates
பின் நாளைக்கு பூமி பூஜை இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். மீனா உடனே வீடு கட்டிருவோமா என கேட்க ஆமாம் என தனம் சொல்கிறார். பின் கதிர் போட்டியில் வெற்றி பெற்ற பணத்தை மூர்த்தியிடம் சொல்கிறார். ஆனால் மூர்த்தி பணத்தை வேண்டாம் என சொல்ல, முல்லை பணத்தால் தான் பிரச்சனை வந்தது என சொல்ல தனம் அதை பற்றி சொல்ல வேண்டாம் என சொல்கிறார். கதிர் எங்களுக்கு செலவு பண்ண பணத்தை போக மீதி பணம் கயலுக்கும் பாண்டியனுக்கும் என சொல்கிறார். பின் கதிர் இது உங்க பணம் என சொல்லி கொடுக்க ஆனால் தனம் முடியாது என சொல்கிறார்.
ஆனால் கதிர் இருக்கட்டும் என சொல்ல,மூர்த்தி இந்த பணத்தை வைத்து முல்லை நகையை திருப்பி கொடு என சொல்கிறார். ஆனால் முல்லை அதெல்லாம் வேண்டாம் என சொல்ல, ஜீவா அதெல்லாம் இல்லை முதலில் நகையை திருப்ப வேண்டும் என சொல்கிறார். ஆனால் கதிர் கேட்காமல் பணத்தை கொடுக்க மூர்த்தி அதை வாங்கி கொள்கிறார். பின் மூர்த்தி பணத்தை பத்திரமாக வைக்க சொல்கிறார். மூர்த்தி முல்லையின் நகையை கண்டிப்பாக திருப்ப வேண்டும் என சொல்கிறார். பின் தனம் முல்லைக்கு பணத்தை வைத்து மீண்டும் சிகிச்சை செய்யலாம் என சொல்ல, மீனா நான் நினைத்தேன் என சொல்கிறார். தனம் மூர்த்தியிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என சொல்ல, மூர்த்தி அதற்கு அவங்க சம்மதிக்க வேண்டும் என சொல்கிறார்.
தமிழகத்தில் இன்று (நவ. 29) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
கதிர் சம்மதித்தாலும் முல்லை வேண்டாம் என சொல்வார் என மீனா சொல்கிறார். பின் தனம் அவங்க வெற்றி பெற்ற பணத்தை அவங்களுக்கு தான் செலவு செய்ய வேண்டும் என தனம் சொல்ல, மூர்த்தி அதுவரை பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர் முழுவதும் நிறைய திருட்டு நடப்பதாக மூர்த்தி சொல்கிறார். பின் கதிரும் கண்ணனும் கட்டில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா அதை பார்த்து கொண்டிருக்க, கண்ணன் இனிமேல் நீ இங்கே தான் தூங்க போறியா என கேட்கிறார். உடனே ஜீவா வந்து மீனாவிடம் என்ன பார்க்கிறாய் என கேட்க, மீனா இது நம்ம கட்டில் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.