தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில் இன்று (நவ.29) 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு :
வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல சாலைகளில் வெள்ளக்காடாய் மாறி இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று வரை அதிகப்படியான மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை – அரசு அறிவிப்பு!
மேலும் இன்று ஒரு சில பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.29) 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, விழுப்புரம்,,தஞ்சை,திருவாரூர்,நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி,நாகை,மயிலாடு துறை,கள்ளக்குறிச்சி,விருதுநகர்,கடலூர்,தென்காசி,தேனி,தி. மலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.