பார்லருக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்த ஐசு, தனத்திற்கு சாப்பாடு கொடுத்த கதிர் – இன்றைய எபிசோட்!

0
பார்லருக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்த ஐசு, தனத்திற்கு சாப்பாடு கொடுத்த கதிர் - இன்றைய எபிசோட்!
பார்லருக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்த ஐசு, தனத்திற்கு சாப்பாடு கொடுத்த கதிர் - இன்றைய எபிசோட்!
பார்லருக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்த ஐசு, தனத்திற்கு சாப்பாடு கொடுத்த கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவின் புது பார்லருக்கு தேவையான பொருள்களை எல்லாம் கண்ணன் வீட்டிற்கு கொண்டு வருகிறார். அதை பார்த்து மூர்த்தி ஆச்சர்யப்படுகிறார். மறுபக்கம் முல்லை கதிர் கடைக்கு சரியாக ஆட்கள் வரவில்லை என நினைத்து வருத்தப்படுகின்றனர். பின் மீதமுள்ள சாப்பாடுகளை கதிர், தனத்தின் கடைக்கு அனுப்பி வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவும் கண்ணனும் சேர்ந்து பார்லருக்கு தேவையான பொருள்களை எல்லாம் கொண்டு வருகின்றனர். அதை எல்லாம் இறக்கி வைக்க மூர்த்தி ஏதோ மேக்கப் பொருள் என்றால் பையில் வைத்து எடுத்து வருவாய் என நினைத்தேன் இப்போது இத்தனை பொருள்கள் மேக்கப் பண்ண வந்திருக்கிறதா என ஆச்சர்யத்துடன் கேட்கிறார். மூஞ்சியை கழுவி பொட்டு வைத்தால் அழகாக இருக்க போறோம் என மூர்த்தி சொல்ல, அதெல்லாம் என்னை போல இயற்கையாக அழகாக இருப்பவர்களுக்கு தான் என மீனா சொல்கிறார்.

அந்த காலத்தில் மரத்தடியில் முடி வெட்டினார்கள், ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது என மூர்த்தி சொல்ல, உடனே பொருள்களை எல்லாம் எடுத்து பார்க்கிறார். மீனா முகத்திற்கு ஒரு பிரஸ் கண்ணிற்கு தனி, மூக்கிற்கு தனி உதட்டிற்கு தனியாக எல்லாம் இருப்பதாக சொல்ல, மூர்த்தி உனக்கு இதை பற்றி நிறைய தெரிந்து இருக்கிறதே என கேட்கிறார். ஆமாம் மாமா நான் காலேஜ் படிக்கும் போது மாதம் 5000 ரூபாய் செலவு செய்வேன் என மீனா சொல்கிறார். இப்போது தான் வெறும் 2000 செலவு செய்வதாக சொல்ல, நம்ம குடும்பத்தில் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை என மூர்த்தி சந்தோசப்படுகிறார்

மறுபக்கம் கதிரும், முல்லையும் மதிய சாப்பாடு சமைத்து விட்டு காத்துக் கொண்டிருக்க இதுவரை 4 பேர் மட்டுமே சாப்பிட வருகின்றனர். ஆனால் அனைவரும் சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்ல, ஆனால் முல்லையின் அம்மா சாப்பாடு எல்லாம் வீணாகி போனதை குத்தி காட்டி பேசிக்கொண்டே இருக்கிறார். தேவை இல்லாத தொழில் எல்லாம் செய்ய வேண்டாம் என சொல்ல, கதிர் இப்போது தான தொடங்கி இருக்கிறோம் சிறிது சிறிதாக கஸ்டமர் வருவார்கள் என சொல்கிறார். பின் ஒரு 8 பேர் சாப்பிட வருகின்றனர். முல்லை கதிர் அவர்களை பார்த்து சந்தோசப்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் சாப்பிட அமர்ந்த பின் இது சைவ உணவகம் என தெரிந்து சாப்பிடாமல் கிளம்புகின்றனர். உடனே கதிரும் முல்லையும் மீண்டும் வருத்தப்படுகின்றனர். அவர்களுக்கு போட்ட இலையில் முல்லை அம்மா அப்பா சாப்பிட அமருகின்றனர். அந்த நேரம் கடையில் வேலை பார்க்கும் அண்ணாச்சி வருகிறார். ஏன் இத்தனை நாள் வரவில்லை என கதிர் கேட்க, வேலை இருந்ததாக அவர் சொல்கிறார். பின் முல்லை சாப்பிட்டு போக சொல்ல அவர் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் சாப்பிட சொல்ல அவர் சாப்பிடுகிறார். சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்ல, கதிர் கடைக்கு சாப்பாடு கொண்டு போக சொல்கிறார். முல்லை அவர்களுக்கு பெரிய கேரியரில் சாப்பாடு வைத்து கொடுக்கிறார்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை? வலுக்கும் கோரிக்கை!

மறுபக்கம் தனம் கடை வேலைகளை பார்க்க மீனா போன் செய்து மணி 3 ஆகிவிட்டது இன்னும் சாப்பாடு எடுக்க ஏன் யாரும் வரவில்லை என கேட்கிறார். சரி நான் ஜீவாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என சொல்ல, ஜீவாவிடம் சாப்பாடு எடுக்க போறியா என கேட்கிறார். ஆனால் ஜீவா நான் போகவில்லை எனக்கு பசி இல்லை என சொல்கிறார். அப்போது அண்ணாச்சி சாப்பாடு உடன் வருகிறார். அதை பார்த்து தனம் எங்கே இருந்து சாப்பாடு வந்திருக்கிறது என கேட்க, கதிர் கொடுத்ததாக அண்ணாச்சி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!