புது ஸ்டைலாக சமைக்கும் கதிர், வியப்பில் கஸ்டமர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

0
புது ஸ்டைலாக சமைக்கும் கதிர், வியப்பில் கஸ்டமர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
புது ஸ்டைலாக சமைக்கும் கதிர், வியப்பில் கஸ்டமர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
புது ஸ்டைலாக சமைக்கும் கதிர், வியப்பில் கஸ்டமர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் மற்றும் முல்லையின் ஹோட்டலை வைத்து தான் கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் தொழிலில் புது ஐடியாவை செய்து கஸ்டமர்களை ஈர்க்க ஆரம்பிக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

ஹோட்டலில் கதிரும் முல்லையும் வேலையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, முல்லை வீடியோவில் பார்த்தது போல் நாமும் செய்யலாமா என்று கேட்கிறார். அது போல், புரோட்டாவை கதிர் லாவகமாக வீசி எரிந்து முயற்சி செய்து பார்க்கிறார். அதை பார்த்து முல்லையின் அம்மா, புலம்புகிறார். உடனே, முருகன் அவர்கள் வேலையை தானே செய்றாங்க, அமைதியாக இருக்குமாறு சொல்கிறார். இனொரு புறம், மீனா, தனம் மற்றும் ஐஸ்வர்யா மூவரும் மேக்கப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டிற்கு வருகிறவர்களுக்கு எல்லாம் மேக்கப் போட்டு சம்பாதிக்குறா என்று ஐஸ்வர்யாவை பற்றி மீனா சொல்கிறார். அதற்கு மீனா எப்படியோ பணம் வருகிறது தானே என்று சொல்லும் போது மீனாவின் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள். ஐஸ்வர்யாவிடம் வீட்டில் சும்மா இல்லாமல் இது போன்று வேலை பார்ப்பது நல்லது தான் என்று சொல்கிறார்கள். பிறகு, தனத்திடம் வீட்டை மாற்றுவது குறித்து கேட்கிறார்கள். அப்போது, ஜனார்த்தனன் இந்த வீடு நல்ல மெயின் இடத்தில் இருப்பதால் கொஞ்ச நாட்களில் அதிக விலைக்கு போகும், அதனால் இங்கேயே சமாளிக்க முடியுமா என்று கேட்கிறார்.

தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!

அதற்கு தனம் மூர்த்தி தான் இந்த வேலைகளை எல்லாம் கவனிப்பதாக சொல்லி விடுகிறார். இன்னொரு புறம், கதிரின் ஹோட்டலிற்கு சாப்பிட ஆட்கள் வருகின்றனர். அவர்கள் அசைவ உணவை கேட்க, முல்லை இது சைவ ஹோட்டல் தான் என்று சொல்லுகிறார்.அவர்கள் புரோட்டாவை ஆர்டர் கொடுக்கின்றனர். அப்போது, கதிர் மாவை புது ஸ்டைலாக வீசுகிறார். இதை பார்த்த கஸ்டமர் ஒருவர், உடனே, அதை வீடியோவாக எடுக்கிறார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிக கஸ்டமர்கள் ஹோட்டலிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here