தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக அரசு துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் அரசு துறைகளில் நாளுக்கு நாள் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் விரைவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு பணி நியமனம்:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் தற்போதைய அரசு, அரசு பணிகளில் ஊழியர்களை நியமனம் செய்வதற்கு என்று பல புதிய விதிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் முறைகேடாக ஊழியர்கள் நியமனம் செய்வது தடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. நேரடி நியமனம் மற்றும் தேர்வு மூலம் நியமிக்கப்படும் அனைத்து வகையான நியமனங்களும் வெளிப்படை தன்மையுடன் இருக்கிறது.

இந்நிலையில், தமிழக பாமக தலைவர் அன்புமணி அவர்கள் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பணி நியமனங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் தற்போது 3.5 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் வைத்து விட்டு, அவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – அரசு அதிரடி!

இது ஒருவையான ஆட்குறைப்பு நடவடிக்கை தான். இதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக உள்ளவர்கள் அனைவர்களும் வேலை இழக்கும் நிலை வரும், மேலும், இதனால் தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும், எனவே தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள 3.5 லட்சம் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் தமிழக அரசு பணியில் உள்ள காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here