விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையை பாராட்டிய பிரபலம் – அவரே பகிர்ந்த தகவல்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா ரோலில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. அவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அவருடைய சேனலிற்கு பிரபல நடிகை ஒருவர் வாழ்த்து சொன்னது குறித்து அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹேமா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் ஒன்றி நடித்து வரும் நிலையில், அந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹேமா. இந்த சீரியலில் அவ்வப்போது கொஞ்சம் வில்லி வேலைகளை செய்தாலும், கடைசியில் குடும்பத்தின் நன்மைக்காக அவர் பேசுவதால் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் ஹேமா சீரியலை தவிர தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதில் பல வீடியோக்களை அவர் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது காட்டப்பட்டு வரும் புது வீடு குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார், அதில் ஏ.ஆர்.எஸ் ஒரு சூட்டிங் ஸ்பாட் அங்கே நிறைய சீரியல்களின் ஷூட்டிங் நடக்கும், இதுக்கு முன்னாடி நம்ம போட்ட ஏ.ஆர்.எஸ் வீடியோ பாத்துட்டு அதோட ஓனர் இங்க மேனேஜர் கிட்ட சொல்லி இருக்காங்க, அந்த ஓனர் யாருமில்லை நடிகை ராதா தான்.
பாரதி எனக்கு வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா – வெளியான சீரியல் அப்டேட்!
Exams Daily Mobile App Download
அவர்களை நான் பார்த்தது இல்லை, ஆனால் அவங்க நம்ம சேனல்ல பாத்துட்டு ரொம்ப நல்லா இருக்கு என இங்க இருக்கிற மேனேஜரிடம் சொன்னதாக அவர் சந்தோசத்துடன் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அதனால் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சீக்கிரம் நடிகை ராதாவை பார்க்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.