No End.. ரசிகர்களுக்காக Climax-ஐ தள்ளி வைத்த விஜய் டிவி சீரியல் குழு – வெளியான சூப்பர் அப்டேட்!!

0
No End.. ரசிகர்களுக்காக Climax-ஐ தள்ளி வைத்த விஜய் டிவி சீரியல் குழு - வெளியான சூப்பர் அப்டேட்!!
No End.. ரசிகர்களுக்காக Climax-ஐ தள்ளி வைத்த விஜய் டிவி சீரியல் குழு - வெளியான சூப்பர் அப்டேட்!!
No End.. ரசிகர்களுக்காக Climax-ஐ தள்ளி வைத்த விஜய் டிவி சீரியல் குழு – வெளியான சூப்பர் அப்டேட்!!

விஜய் டிவியில் முதல் சீசனுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை அடுத்து மௌன ராகம் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதுவும் மக்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் கிடைத்துள்ளது

மௌன ராகம் 2:

அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து விஜய் டிவி மௌன ராகம் சீரியல் எடுக்கப்பட்டது. அப்பா இல்லாமல் வளரும் பெண் தன்னுடைய அப்பாவை கண்டுபிடித்தும் சேர முடியாமல் போனது எல்லாம் முதல் சீசனில் காட்டப்பட்டது. அதன் பின் மக்களின் ஆதரவை பார்த்து மௌன ராகம் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் பழைய கதையை முதன்மையாக வைத்து இருந்தாலும், அதில் கூடுதல் கதை சேர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் – வெளியான உறுதி தகவல்!

Exams Daily Mobile App Download

பல திருப்பங்களுடன் காதல் காட்சிகளும் வைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக செய்தி ஒன்று வெளியானது. மேலும் TRPயிலும் இந்த சீரியல் சற்று சரிவை சந்தித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பல விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்பட்டதால் இந்த சீரியலின் TRP தற்போது நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் 3 முதல் 6 மாதங்களுக்கு சீரியலின் கதையை சேனல் நிர்வாகம் நீடித்துள்ளது. இதன் மூலம் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் விஜய் டிவி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!