பிக்பாஸ் சீசன் 6ல் ஏழாவது வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் – வெளியான லிஸ்ட்!

0
பிக்பாஸ் சீசன் 6ல் ஏழாவது வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் - வெளியான லிஸ்ட்!
பிக்பாஸ் சீசன் 6ல் ஏழாவது வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் - வெளியான லிஸ்ட்!
பிக்பாஸ் சீசன் 6ல் ஏழாவது வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் – வெளியான லிஸ்ட்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது ஏழாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த வார தலைவராக மைனா நந்தினி இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நாமினேஷன்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 43 நாட்கள் ஆகிறது. ஏழாவது வார தொடக்கத்தில் வீட்டின் தலைவராக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற இருப்பதாக ப்ரோமோ வெளியானது. அதனால் நிச்சயம் போட்டியாளர்களிடையே சண்டை வரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தலைவர் போட்டியில் தனலட்சுமி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரை தோற்கடித்துவிட்டு மைனா வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

DNA டெஸ்ட் ரிசல்ட்டில் பாரதி எடுக்க போகும் முடிவு – வெளியான “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வார ஓபன் நாமினேஷன் முடிவில் யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி, தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் ராம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது, மேலும் தனலட்சுமி நடந்து கொள்ளும் விதமும் பலருக்கு பிடிக்காமல் இருக்கிறது என்பதால் அவரும் வெளியேறுவாரா என்பது எல்லாம் இந்த வார இறுதியில் தெரிய வரும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!