சினிமாவில் அதுவும் கதாநாயகியாக களமிறங்கிய விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் சீசன் 6ல் புதுமுக போட்டியாளராக களமிறங்கிய ஸ்ருதி தற்போது சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ஸ்ருதி:
சின்னத்திரையில் ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5ல் புதுமுக போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதி. அவர் ஒரு மாடல் மற்றும் தமிழ் பெண்ணும் கூட. அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர் அதன் பின் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
பாரதி கண்ணம்மா போல இரண்டாம் பாகத்திற்கு தயாரான சன் டிவி சீரியல் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அவர் தற்போது சினிமாவில் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நந்தன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் அவர் ஒரு கிராமத்து பெண் தோற்றத்தில் நடித்து இருக்கிறார். அவருடைய படம் வெற்றி பெற வேண்டும் என ஸ்ருதி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.