ஹேமா.. நான் தான் உன்ன பெத்த அப்பா – மகளின் உயிரை காக்க கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த பாரதி!

0
ஹேமா.. நான் தான் உன்ன பெத்த அப்பா - மகளின் உயிரை காக்க கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த பாரதி!
ஹேமா.. நான் தான் உன்ன பெத்த அப்பா - மகளின் உயிரை காக்க கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த பாரதி!
ஹேமா.. நான் தான் உன்ன பெத்த அப்பா – மகளின் உயிரை காக்க கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த பாரதி!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தனது அப்பா யார் என தெரிந்து கொள்ள ஹேமா உயிரை பணயம் வைக்க நினைக்கிறாள். இந்நிலையில் DNA முடிவை தெரிந்து கொண்ட பாரதி ஹேமாவிடம் நான் தான் அப்பா என உண்மையை சொல்ல இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதிக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கண்ணம்மா தவறு செய்யவில்லை எனவும், ஹேமாவும் லக்ஷ்மியும் தன்னுடைய குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதனால் பாரதி மனம் உடைந்து இருக்கிறார். இத்தனை நாட்களாக கண்ணம்மாவை நம்பாமல் இருந்ததை நினைத்து மிகவும் மனம் வருத்தப்படுகிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் ஹேமா, தன்னுடைய அப்பா யார் என அறிய வேண்டும் என குறிக்கோளுடன் இருக்க, அதனால் ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது. மேலும் ஹேமாவின் உயிருக்கே ஆபத்து வர இருந்த நிலையில், பல போராட்டங்களுக்கு பின் கண்ணம்மா ஹேமாவை காப்பாற்றி இருக்கிறார். ஆனால் அப்பாவை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த ஹேமா தவறான முடிவு ஒன்றை எடுக்கிறாள். மருத்துவமனை மாடியில் நின்று கொண்டு அப்பாவை பார்க்க வேண்டும் என மிரட்ட, கண்ணம்மாவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை.

இனியாவால் ராதிகா வாழ்க்கையில் விழ போகும் இடி.. மனம் மாறிய கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

அடுத்து வரும் எபிசோடில் ஹேமாவை காப்பாற்ற பாரதி டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார். ஹேமாவிடம் நான் தான் உன்னுடைய அப்பா என சொல்லி புரிய வைக்கிறார். ஹேமா பாரதி சொல்வதை உண்மை என நம்பி கீழே வருவாளா என்பது எல்லாம் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்க போகிறது. எனவே ரசிகர்கள் இந்த காட்சிகள் எப்போது வரும் கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்வாரா என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!