ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதியின் DNA ரிசல்ட் – TRPயில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல்!

0
ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதியின் DNA ரிசல்ட் - TRPயில் மாஸ் காட்டிய
ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதியின் DNA ரிசல்ட் - TRPயில் மாஸ் காட்டிய "பாரதி கண்ணம்மா" சீரியல்!
ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதியின் DNA ரிசல்ட் – TRPயில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல்!

விஜய் டிவியில் ஒரு காலத்தில் டாப் சீரியல் வரிசையில் இருந்த “பாரதி கண்ணம்மா” சீரியல், கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக TRPயில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இத்தொடரின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நிலையில், TRPயில் புதிய சாதனை ஒன்றை இத்தொடர் படைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல்:

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு வரை டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதன் பின் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக TRPயில் சரிவை கண்டது. மேலும் பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என தெரியாமல் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஒரு வழியாக தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் நெருங்கிவிட்டது. பாரதியும் DNA டெஸ்ட் எடுத்து உண்மையை தெரிந்து கொண்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Exams Daily Mobile App Download

அதனால் ரசிகர்கள் மத்தியில் சீரியல் முடிவு எப்படி இருக்கும், கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பெரிய திருப்பமாக இருக்க போகிறது. மேலும் பாரதி DNA டெஸ்ட் எடுத்து முடிவை தெரிந்து கொண்ட காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் கடந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் 9.50 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்து இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் மாஸ் எபிசோடாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!