விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி ராதிகாவுடன் சேர்வதர்கு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும், உண்மைகள் தெரிய வரும் போது பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளுடனும் தொடர் நகர்கிறது. அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் சம்பளம்:
பாக்கியலட்சுமி தொடரில் சமீப காலமாக குடும்பத்தில் ஒரே அழுகையும் ,சண்டையும் மட்டுமே காட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யங்களும் நிறைந்த தொடராக பார்வையாளர்களை அதிகரித்து வருகிறது. வெகுளித்தனமான மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து தனது முன்னாள் காதலி ராதிகா வீட்டில் தங்கும் அளவுக்கு கோபி வந்துள்ளார். சிக்குவாரா? சிதைவரா? என்று நினைத்திருக்கும் வேலையில் எதிர் பாரத விதமாக செழியன் குறித்து ப்ரோமோ ஒன்று வெளியானது.
விரைவில் முடிவுக்கு வரும் பிரம்மாண்ட சீரியல் ‘எங்க வீட்டு மீனாட்சி’ – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதில் செழியன் வாழ்க்கையை வெறுத்த ‘தேவ தாசன்’ போன்று நான் ஜெனியுடன் இனி வாழப் போவதில்லை அதனால் விவாகரத்து செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார். அதை கேட்ட பாக்கியா கோபத்தில் பளார் என்று செழியன் கன்னத்தில் ஒரு அறை விட்டு விவாகரத்து செய்வது அவ்வளவு சுலபமா போச்சா? கல்யாணம் வாழ்க்கைனா அவ்ளோ கீழ்மட்டமா போச்சா? என்ற பாணியில் சரமாறியாக விட்டு விளாசினார். அதை கண்டு அதிர்ச்சியில் மீள முடியாதவராக கோபி திருதிருவென முழிப்பது போன்றதை கண்ட ரசிகர்கள் அந்த காட்சிகளுக்காக காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹீரோவான ‘குக் வித் கோமாளி’ புகழ் – போஸ்டர் வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடர் கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாக்கியலட்சுமியான சுசித்ரா அவர்களுக்கு ஒரு நாள் 15000 ரூபாயும், கோபியாக வரும் சதீஷ் அவர்களுக்கு ஒரு நாள் 12,000 ரூபாயும், ராதிகா அவர்களுக்கு 12,000 ரூபாயும், ஜெனி, செழியன் மற்றும் எழில் அவர்களுக்கு ஒரு நாள் 10,000 ரூபாயும்,இனியாவுக்கு 8,000 ரூபாயும் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.