
பாக்கியா வீட்டில் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் அம்மா.. வெடிக்க போகும் சம்மந்தி சண்டை – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டில் ராதிகா தங்கியது முதல் அவருக்கு எந்த மரியாதையும் கிடைக்காமல் இருக்கிறது. அதனால் ராதிகாவின் அம்மா பாக்கியா வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மாறிவிடுவார் என பயந்து ராதிகா, பாக்கியா வீட்டில் வந்து தங்கிவிடுகிறார். அங்கே ஈஸ்வரி அவரை துளி கூட மதிக்காமல் இருக்கிறார். ராதிகா என்ன செய்தாலும் அவரை குறை சொல்வதும், சண்டை போடுவதுமாக இருக்க, கோபி அவருக்கு சிறிது கூட ஆதரவாக இல்லை. இப்படி ராதிகா நிர்கதியாக நிற்க அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என அவருடைய அம்மா பாக்கியா வீட்டிற்கு பேத்தி உடன் வருகிறார்.
அதனால் ஈஸ்வரிக்கு கோவம் தலைக்கு ஏற, இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. ஏற்கனவே ஈஸ்வரி-ராதிகா சண்டையை தாங்க முடியாத கோபி, கூடுதலாக ராதிகாவின் அம்மாவும் சேர்ந்து சண்டை போடுவதால் நிம்மதி இல்லாமல் திண்டாடுகிறார். அதனால் அவர் ராதிகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download